Home /News /national /

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா? புதிய தகவல்

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா? புதிய தகவல்

தடுப்பூசி - மாதிரிப்படம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

உலக நாடுகளை பொருத்தளவில், போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் தற்போது ஸ்விட்சர்லாந்தும் 5 - 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது.

    இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸால் முடக்கப்பட்டன. தடுப்பூசி ஏதும் இல்லாமல் உலக நாடுகள் தவித்து வந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை உலக நாடுகளுக்கும் உயிர் காக்கும் அரணாக செயல்பட்டது.

    தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் நிலைக்கு சென்றன. இந்த சூழலில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான், தென்னாப்பிரிக்காவில் உருவாகி 60-க்கும் அதிகமான நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

    Also Read : வறுமையின் காரணத்தால் படிப்பை கைவிட்டு, டீ விற்ற நபர் தற்போது பேராசிரியராக பணிபுரிகிறார்! இவரின் உண்மை கதை இதோ!

    இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அதிகரித்ததை தொடர்ந்து மும்பையில் 2 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    குறிப்பாக குழந்தைகளையும் ஒமைக்ரான் தாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் மத்தியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. மும்பையில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றரை வயது குழந்தையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதிலும், நீண்ட நாட்கள் நோயுடன் இருப்பவர்கள், முக்கிய உறுப்பு பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின்றி தடுப்பூசி போடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    Also Read : ஆந்திராவில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் அவர்கள் பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த வைரஸ் அலை வரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழலில் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, ''குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை. இதுதொடர்பான பல தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன'' என்று தெரிவித்துள்ளது.

    உலக நாடுகளை பொருத்தளவில், ஐரோப்பாவில் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் தற்போது ஸ்விட்சர்லாந்தும் 5 முதல்11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது.

    ஸ்விட்சர்லாந்தில் 5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர்-பயோடெக்கின் காமிர்னடி தடுப்பூசி போட சுவிஸ் மருந்து நிறுவனமான ஸ்விஸ்மெடிக் ஒப்புதல் அளித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி