முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 25-ஆக உயர்வு... கட்டுப்பாடு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 25-ஆக உயர்வு... கட்டுப்பாடு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்

கொரோனா தடுப்பூசிகள் 2 டோசும் செலுத்தியிருந்த நிலையில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் 2 டோசும் செலுத்தியிருந்த நிலையில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் 2 டோசும் செலுத்தியிருந்த நிலையில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

    இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 25 ஆக உயர்ந்துள்ளது. பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது.

    ஏற்கனவே 23 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் ஒருவர் கடந்த 4-ம்தேதி ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத்தின் ஜாம் நகருக்கு வந்துள்ளார். அவருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒமைக்ரான் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தற்போது அவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

    Also Read : ராஜஸ்தானில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்தனர்

    இன்னொருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜாம் நகருக்கு வந்தவர். அவர் கொரோனா தடுப்பூசிகள் 2 டோசும் செலுத்தியிருந்த நிலையில் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் வந்திருந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே வழக்கமாக இயக்கப்பட்டு வரும் சர்வதேச சரக்கு விமான சேவை, புத்தாண்டு முதல் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : ஒமைக்ரான் பரவல்‌: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

    உலக நாடுகளில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    டெல்லி சர்வதேச விமான நிலையித்தில், ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்வதற்காக 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    First published: