Omicron Cases in India | இந்தியாவில் ஓமைக்ரன் கொரோனா தொற்று அலை கடந்த ஏப்ரல் 2021-ல் தொடங்கிய டெல்டா அலை போல் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று மருத்துவ அளவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கிறிஸ்டபர் முரே எச்சரித்துள்ளார்.
டெல்டா அலை இந்தியாவை முடக்கியது, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்தது, அதே போன்ற ஒரு அதிகரிப்பை கொரோனா ஓமைக்ரான் தொற்றிலும் காணலாம் என்று டாக்டர் கிறிஸ்டபர் முரே எச்சரித்துள்ளார். இவர் வாஷிங்டன்பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ அளவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நாடுகளை விட இந்தியா கோவிட்-19 சூழ்நிலைகளை நன்றாகக் கையாண்டது என்று இந்திய அரசு கூறிக்கொள்ளும் நிலையில் செவ்வாயன்று 50 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா புதனன்று கடந்த 24 மணி நேரத்தில் 58,097 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 534 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,551 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,14,004 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள்: மகாராஷ்டிரா - 653, டெல்லி -464, கேரளா - 185, குஜராத் - 154, ராஜஸ்தான் -174 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.
இந்நிலையில் எந்த கட்டுப்பாடுகளும் டெல்டாவை விட வேகமாகப் பரவும் ஓமைக்ரானை அடக்கி விட முடியாது என்கிறா டாக்டர் கிறிஸ்டபர் முரே. ஆங்கில ஊடகத்துக்கு இவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “உலகம் முழுதும் 2 மாதங்களில் ஓமைக்ரான் அலை 300 கோடி பேரை தொற்றும், இந்தியாவில் டெல்டா அலையில் பார்த்தது போல் ஓமைக்ரான் அலை பரவும்” என்றார்.
இதையும் படிங்க: கொரோனா காலத்தில் யோகா உதவியாக இருக்கும் - தமிழிசை செளந்தரராஜன்
மேலும் ஜனவரி மத்தியில் பரவல் உச்சம் தொட்டு, நாளொன்றுக்கு உலகம் முழுதும் 3 கோடியே 50 லட்சம் பேர் ஓமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள், இது டெல்டா அலையை விட 3 மடங்கு உச்சம்பெறும் அலையாகும். இந்தியாவில் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சம் தொடும். அறிகுறியில்லாமலேயே தொற்று ஏற்படும், இதனால் ரிப்போர்ட் ஆகாமலேயே நிறைய கேஸ்கள் இருக்கும். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மரண விகிதமும் குறைவாகவே இருக்கும்” என்கிறார் டாக்டர் முரே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, Delta Variants, Omicron