ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 126 ஆக அதிகரிப்பு...

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 126 ஆக அதிகரிப்பு...

கோப்புப் படம்

கோப்புப் படம்

Omicron Cases In India: ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களையும், பெருங்கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் ஓமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 43 பேருக்கு ஓமைக்ரான் திரிபு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒன்றரை முதல் 3 நாட்களில் இரு மடங்காக அதிகரிப்பதாகவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

  இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கர்நாடகாவில் 14 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும், குஜராத்தில் 7 பேருக்கும் ஓமைரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

  மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகி மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களையும், பெருங்கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  தொற்று பாதிப்பு 5 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: CoronaVirus, Omicron