இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1270 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,585 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக 3,42,66,363 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36% என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 220 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மொத்தமாக 4,83,080 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, 91,361 சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இதுவரை 144.54 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also read: இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.