ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒமிக்ரான் BA.2.75: இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய வேரியன்ட் எவ்வளவு ஆபத்தானது?

ஒமிக்ரான் BA.2.75: இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய வேரியன்ட் எவ்வளவு ஆபத்தானது?

Omicron BA.2.75

Omicron BA.2.75

Omicron BA.2.75 | இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள BA.2.75 கொரோனா வைரஸ் வேரியன்ட் எவ்வளவு ஆபத்தானது, இந்த வேரியன்ட்டின் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பது பற்றி ஆய்வாளர்கள் பகிர்ந்த விவரங்கள் இங்கே.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

சில வாரங்களுக்கு முன், கிட்டத்தட்ட உலகம் முழுக்க கோவிட் பாதிப்பிலிருந்து நீங்கி வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக நினைப்பதற்குள், மீண்டும் கோவிட் பாதிப்பு தொடங்கி விட்டது. கோவிட் வைரஸ் பாதிப்பின் இரண்டாம் அலையின் போது, பல புதிய வேரியன்ட்களும் கண்டறியப்பட்டன. அதில் ஒமிக்ரான் அதிவேகமாக பரவியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

தற்போது, ஒமிக்ரான் BA.2.75 என்ற புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட் ஒன்று மீண்டும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது, இந்த வேரியன்ட்டின் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பது பற்றி ஆய்வாளர்கள் பகிர்ந்த விவரங்கள் இங்கே.

முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் BA.2.75

உலக சுகாதார மையத்தின் முன்னணி மருத்துவ விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் ட்விட்டர் தளத்தில் இந்த புதிய வேரியண்ட் பற்றிய தகவலை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் முதல் முதலாக இந்த வேரியன்ட் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதை தொடர்ந்து தற்பொழுது 10 நாடுகளில் இதே வேரியன்ட் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கோவிட் வைரஸின் மற்றொரு வேரியன்ட் கண்டுபிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வேரியன்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட இது சாதாரணமானதுதான் என்று எண்ணினார்கள். ஆனால் உலக சுகாதார மையம் , கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி புதிய வேரியன்ட் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது.

ஒமிக்ரான் BA.2.75 கிளினிக்கல் அறிகுறிகள்

இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் இந்த வேரியன்ட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தீவிரமானதாக காணப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான எந்த அறிகுறியும் பதிவு செய்யப்படவில்லை. எனவே புதிய ஒமிக்ரான் வேரியன்டால் தொற்று ஏற்பட்டாலும் அது மிகவும் மைல்டாகவும் அல்லது அறிகுறி இல்லாத தொற்றாகவும் தான் இருந்து வந்துள்ளது.

Also Read : கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு குறித்து அதிகரிக்கும் விழிப்புணர்வு..

ஆனால் இந்த சூழல் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கோவிட் தொற்று பாதிப்பால் இணை நோய்கள் உள்ள நபர்கள் மற்றும் முதியவர்கள் பலரும் தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டனர். இணை நோய்களால் கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள் இறந்தும் போயினர் என்பது அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது. எனவே இணை நோய்கள் இருப்பவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால், கவனமாகவும் உரிய மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Also Read : வெவ்வேறு வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை வெளிப்படுத்திய ஆய்வு!

சமீபத்தில் தான் இது கண்டறியப்பட்டதால் இது ஒரு நபரின் உடலில் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும், அது தீவிரமான தொற்று உண்டாக்கி அதன் விளைவுகளை அச்சுறுத்தக் கூடியதாக மாற்றுமா என்பதை கண்டறிவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

மற்ற நாடுகளில் ஒமிக்ரான் BA.2.75 எந்த நிலையில் உள்ளது

உலக சுகாதார மையத்தின் தகவல்படி ஒமைக்ரான் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. BA.4 பாதிப்பு 73 நாடுகளிலும், BA.5 பாதிப்பு 83 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது, இந்த இரண்டு வேரியன்ட்டின் பாதிப்பையும், தொற்று பரவும் வீதம் மற்றும் தன்மை ஆகியவற்றை WHO தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Also Read : சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதியா..? இயற்கையாகவே கல்லை கரைக்கும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்

கோவிட் பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியவில்லை

உலகையே முடக்கிப் போட்ட பெருந்தொற்று இன்னும் நீங்கவில்லை என்பது அச்சுறுத்தக்கூடியதாகவும், இடையில் கோவிட் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்து இயல்பு வாழ்க்கை மீண்டும் வந்தது போல தோன்றினாலும் அது ஒரு இடைப்பட்ட காலத்திற்கு தான் என்பது மீண்டும் மீண்டும் உருவாகும் புதிய வேரியண்ட்டுகள் உறுதி செய்து வருகின்றன. எனவே குறைந்தபட்சம் சில மாதங்களுக்காவது கோவிட் தொற்று முழுவதுமாக நீங்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இதற்கு முன்பு கோவிட் பாதிப்பு ஏற்படாமல் எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறைகளை நாம் கடைப்பிடித்தமோ அதையே தொடர்ந்து பின் பற்றுவது தான் தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஒரே வழியாக இருக்கிறது.

First published:

Tags: Covid-19, Omicron