ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓமிக்ரான்: தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வரும் விமானங்களை தடை செய்யுங்கள் : மோடிக்கு கெஜ்ரிவால் அவசர கோரிக்கை

ஓமிக்ரான்: தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வரும் விமானங்களை தடை செய்யுங்கள் : மோடிக்கு கெஜ்ரிவால் அவசர கோரிக்கை

''புதிய வகை வைரஸ், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 40 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்'' என்ற புதிய தகவலை சுகாதார வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

''புதிய வகை வைரஸ், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 40 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்'' என்ற புதிய தகவலை சுகாதார வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

''புதிய வகை வைரஸ், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 40 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்'' என்ற புதிய தகவலை சுகாதார வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

  ஓமிக்ரான் (Omicron)எனப்படும் B 1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்கத்து நாடுகளான ஜிம்பாப்வே, நமிபியா, போத்ஸ்வானா உள்ளிட்டவைகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும் விமானப் பயணிகள் மூலமாக இந்த புதிய வகை வைரஸ் இஸ்ரேல் மற்றும் சீனா அருகே இருக்கும் ஹாங்காங்கிற்கும் பரவியுள்ளதால் சுகாதார வல்லுனர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  கொரோனா தாக்குதலில் இருந்து உலகம் மீளாத நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் பரவி வருகிறது.

  ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

  ''புதிய வகை வைரஸ், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 40 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்'' என்ற புதிய தகவலை சுகாதார வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். ஒமிக்ரான் பி 11529 வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நேற்று சுகாதார உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டது.

  இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வல்லுனர்கள் கவனம் செலுத்தி ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், புதிய வகை வைரஸ் குறித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும். எனவே வைரஸ் பாதிப்பு வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வரும் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Arvind Kejriwal, Corona, South Africa