தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் கிருமியே ஒரு வாக்சின் தான், அதுவே ஒரு இயற்கையான தடுப்பு, எதிர்ப்பு சக்திதான் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.
அதிவேகமாகப் பரவினாலும் ஓமைக்ரான் அறிகுறிகளற்றே வருகிறது, மருத்துவமனை சேர்ப்பு விகிதமும் குறைவு, மரண விகிதமும் குறைவு. இதனால்தான் ஓமைக்ரான் ஒரு இயற்கையான கவசம், தடுப்பு என்ற கருத்து பரவலாகி வருகிறது.
“இந்தப் போக்கு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். இது நடந்தால், ஓமைக்ரான் ஒரு இயற்கை தடுப்பூசியாகச் செயல்படும், மேலும் அதன் (COVID-19) தொற்றுப்பரவல் என்ற நிலையிலிருந்து உடம்புக்குள்ளான ஒரு பிரச்சனையாக மாற உதவும்" என்று டாக்டர் பிரதீப் அவாதே பிடிஐயிடம் தெரிவித்தார்.
ஆனால் இது பொறுப்பற்றவர்களின் அபாயகரமான கருத்து என்று பிரபல வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் தெரிவித்துள்ளார், “இது ஒரு விதமான அலட்சிய மனோபாவத்தை வளர்த்து விடும் மேலும் இந்த நேரத்தில் விட தொற்றுநோயால் ஏற்பட்ட சோர்வு மற்றும் எதுவும் செய்ய இயலாமை ஆகியவற்றினால் இத்தகைய ஓமைக்ரான் என்பது இயற்கை தடுப்பூசி போன்ற கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு, காற்று மாசுபாடு மற்றும் நீரிழிவு நோய் அதிகமாக உள்ள நிலையில், அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்துக்கு விரோதமாக ஓமைக்ரான் ஒரு இயற்கை தடுப்பூசி என்று சொல்வது அபாயகரமான கருத்து” என்று எச்சரித்துள்ளார்.
இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் லைஃப்கோர்ஸ் எபிடெமியாலஜியின் தலைவர் கிரிர் ஆர் பாபு, இந்த தவறான தகவலில் இருந்து விலகி இருக்குமாறு மக்களை வலியுறுத்தினார், ஓமைக்ரான் வைரஸினால் இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களும் இருக்கின்றனர், என்று எச்சரித்துள்ளார்.
அவர் கூறும்போது, “தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், இயற்கையான தொற்று மக்கள் தொகையை (இறப்பு அல்லது மருத்துவமனையில் சேர்வதற்கு எதிராக) எந்த உருமாற்ற வைரஸுக்கும் (ஆல்பா, பீட்டா, காமா அல்லது டெல்டா) எதிராக பாதுகாக்க முடியாது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிப்பவர்கள் ஓமைக்ரான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று மீண்டும் கூறுகிறார்கள். ஆதாரம் முக்கியம், சொந்தக் கருத்துக்கள் அல்ல,'' என்றார்.
Also Read: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் 13 மடங்கு அதிகரிப்பு..
ஆனால் உலகம் முழுதும் நிபுணர்கள் கூறுவதென்னவெனில், இந்த கொரோனா வைரஸ் வகைகள் மாறுபாடு அடைய அடைய அதன் வீரியம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் மெல்லச் சாகும் என்கின்றனர், ஆனால் இவையெல்லாம் ஆய்வுக்குரியவையே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Omicron, Omicron Symptoms