ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு செல்லாத நபருக்கும் இந்தியாவில் அத்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒமிக்ரான் வெளிநாட்டில் இருந்து வரவில்லை என்றும். இந்தியாவிலேயே உள்ளது என்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முன்னாள் தலைவர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது 20 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ளது. இந்தியாவிலும் 4 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் முதலில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், அச்சப்படவேண்டிய விசயம், பெங்களூருவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேரில் ஒருவர் மருத்துவர், இந்த நபர் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்லாதவர். மேலும் இவரிடம் தொற்று ஏற்பட்டதற்கான, எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
இது தொடர்பாக இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பான, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) முன்னாள் தலைவர் ராகேஷ் சர்மா நியூஸ் 18 ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பெங்களூரு மருத்துவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், இந்த அதிக மாற்றமடைந்த தொற்று விமானம் மூலம் மட்டும் வரவில்லை, இங்கேயே இருக்கிறது என்பதையும் உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார். பிரதான நகரங்களில் இந்த வகை தொற்று இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 3-வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது
அதேவேளையில், இந்த தொற்று குறைந்த அறிகுறிகளையே ஏற்படுத்தக் கூடும், சமூக பரவலுக்கான வாய்ப்புகள் இருந்தாலும்,இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விரிவான கண்காணிப்பு மற்றும் மரபணு பரிசோதனை ஆகியவை தேவைப்படும் அதேவேளையில், நாட்டில் இருந்தாலும், இத்தகைய வைரஸ், மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கோ உயிரிழப்பு அளவுக்கோ பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பது சாதகமான அம்சம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தொற்று வீரியமற்றதாக இருந்தால் நல்லது. எனினும் என்னால் உறுதியாக கூறமுடியும், கொரோனா எண்ணிக்கை குறைந்ததால் நாம் கடைபிடிக்க மறந்த கட்டுப்பாடுகளை நமக்கு நினைவூட்டவே இந்த தொற்று வந்துள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவை மிக அவசியம் என ராகேஷ் சர்மா கூறினார்.
மேலும் படிங்க: கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
தடுப்பூசிகளை துரிதமாக செலுத்தியதன் காரணமாக இந்தியா இந்த தொற்றுக்கு எதிராக வலுவான நிலையில் இருப்பதாக கருதுவதாக கூறும் ராகேஷ் சர்மா, மரபணு பரிசோதனையையும் துரிதப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்யும்போது நிறைய பாதிப்புகளை கண்டறிய முடியும் என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.