Home /News /national /

தென்னாப்பிரிக்காவில் 5 வயதுக்குட்பட்டோரை அதிகமாக தாக்கும் ஓமைக்ரான்... இந்தியாவிலும் பாதிப்பு இருக்குமா?

தென்னாப்பிரிக்காவில் 5 வயதுக்குட்பட்டோரை அதிகமாக தாக்கும் ஓமைக்ரான்... இந்தியாவிலும் பாதிப்பு இருக்குமா?

 ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்

ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்

ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்

    உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென்னாப்பிரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் தென்னாப்பிரிக்காவை போன்று, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒமைக்ரான் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்று பிரபல மருத்துவரும் சௌமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக, விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில எல்லைகளிலும், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    Also Read :  ஒமைக்ரான் தொற்று : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

    இதுவரை இந்தியாவில் மொத்தம் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மாஸ்க் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, அதிக எண்ணிக்கையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தென்ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது, குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான டுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளைப் போல் அல்லாமல், இந்த முறை குழந்தைகள் கர்ப்பிணிகள் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்'' என்று தெரிவித்தனர்.

    Also Read : இந்தியாவில் சிறுவர்களுக்கு தடுப்பூசி அவசியமா?: வல்லுநர் குழு ஆலோசனை
     இதற்கிடையே தென்னாப்பிரிக்காவை போன்று இந்தியாவில் குழந்தைகளில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று, பிரபல மருத்துவர் சவுமித்ரா தாஸ் கூறியுள்ளார்.


    இதுதொடர்பாக நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ‘மரபணு அடிப்படையில் இந்திய குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்பை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும். ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்.'' என்று தெரிவித்துள்ளார்
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி