Home /News /national /

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல், செக் குடியரசு நாடுகள் உள்பட 35 நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 21-ஆக உயர்ந்துள்ளது.

    இன்று மாலை வரை 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தற்போது மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சததை கடந்துள்ளது. இது தவிர வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கம், தீவிர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் வேலையிழந்தும், தொழில் நலிவுற்றும் ஏராளமானோர் பொருளாதார ரீதியில் சிதைவுற்றுள்ளனர்.

    இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது, இனி இயல்பு நிலைக்கு திரும்பலாம் என பெருமூச்சு விடுவதற்குள் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா திரிபு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

    கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரிபுகளை ஒமைக்ரான் கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

    Also Read :  முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி ஒமைக்ரான் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல், செக் குடியரசு நாடுகள் உள்பட 35 நாடுகளுக்கு பரவியுள்ளது.

    கடந்த வாரம் கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது. கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவருக்கும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரம் திரும்பிய 33 வயது இளைஞர் ஒருவருக்கும் அடுத்தடுத்து ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

    Also Read : தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

    இதன்பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பரிசோதனை நடத்தினால், எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று நுழையவில்லை என்று கூறியுள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி