ஹோம் /நியூஸ் /இந்தியா /

Omicron: இந்தியாவில் 3-வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது

Omicron: இந்தியாவில் 3-வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது

இந்தியாவில் 47 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுள்ளனர். சுமார் 80 கோடி பேர் முதல் டோசை செலுத்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 3-வது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குஜராத் மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்த, 72 வயதான ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டில் இருந்து இந்தியா திரும்பினார். அவருக்கு கடந்த வியாழனன்று, கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டு, அவர்களிடமும் பரிசோதனை நடத்த குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த 46 வயதான மருத்துவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நபர் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்லாதவர். மேலும் இவரிடம் தொற்று ஏற்பட்டதற்கான, எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

Also Read : Omicron : கேன்சல் ஆகும் டிக்கெட்டுகள்... சுற்றுலாத் துறையில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது ஒமைக்ரான்

இதேபோன்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான நபர் ஒருவர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.

தற்போது மொத்தம் 3 பேருக்கு இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் எந்தவிதமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது, இன்னும் ஓரிரு வாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை மொத்தம் 35 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருப்பறுது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மிகப்பெரிய அளவில் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

Also Read : தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை' : சுகாதாரத்துறை செயலர் தகவல்

இந்தியாவில் 47 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுள்ளனர். சுமார் 80 கோடி பேர் முதல் டோசை செலுத்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன.

First published: