Home /News /national /

Omicron : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... சர்வதேச பேரழிவை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

Omicron : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... சர்வதேச பேரழிவை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 33-ஆக உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 33-ஆக உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 33-ஆக உயர்ந்துள்ளது.

     

    புதிதாக ஜிம்பாப்வேயில் இருந்து டெல்லி திரும்பிய நபர் ஒருவருக்கு  ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், மாஸ்க் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், மூன்றரை வயது குழந்தையும் அடங்கும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மும்பையில் 144 தடை உத்தரவு 2 நாட்களுக்கு போடப்பட்டுள்ளது.

    Also Read : Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

    இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் லேசாகவே உள்ளது. அதாவது, உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளுடன் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. உலக அளவில் 59 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    Also Read : இந்தியாவில் முகக்கவசம் அணிவது குறைந்துவிட்டது: எச்சரிக்கும் மத்திய அரசு!

    பிரிட்டன், டென்மார்க் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகள் தான் அதிக அளவு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளை ஒமைக்ரான் அச்சுறுத்தி வந்தாலும், அது முன்னர் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மற்றும் வேரியன்ட்களை போன்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பிரபல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    'சர்வதேச பேரழிவாக ஒமைக்ரான் தொற்று மாறுவதை தடுக்க முடியும்' என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி