முகப்பு /செய்தி /இந்தியா / வைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..!

வைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..!

உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா

ப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர்.

  • Last Updated :

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர்  முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது. ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்ட்டது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர்.

தற்போது அங்கு பல முன்னேற்ற ஏற்பாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணைய சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் தனது மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்னால் உமர் அப்துல்லாவை அடையாளம் காணவே முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா..? இதல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Jammu and Kashmir