வீட்டுக்காவலில் இருந்து 8 மாதத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா!

"மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்களையும் வீட்டுக்காவலில் இருந்து மத்திய அரசு விடுவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் உமர் அப்துல்லா.

வீட்டுக்காவலில் இருந்து 8 மாதத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா!
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாஹ்
  • Share this:
ஜம்மு- காஷ்மீரில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட்ட வேண்டும் என வீட்டுக்காவலில் இருந்து வெளியே வந்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், எட்டு மாத காலமாக வீட்டுக்காவலில் இருந்த உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார். வெளியே வந்து பேட்டியளித்த அவர், மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்களையும் வீட்டுக்காவலில் இருந்து மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றார்.

Also see: 
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்