ஆளுநர் விளக்கம் போதாது; இந்திய அரசு விளக்க வேண்டும்! காஷ்மீர் விவகாரத்தில் ஓமர் அப்துல்லா வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது என்று கருத்து பரவிவருகிறது. அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

news18
Updated: August 3, 2019, 3:26 PM IST
ஆளுநர் விளக்கம் போதாது; இந்திய அரசு விளக்க வேண்டும்! காஷ்மீர் விவகாரத்தில் ஓமர் அப்துல்லா வலியுறுத்தல்
ஒமர் அப்துல்லா
news18
Updated: August 3, 2019, 3:26 PM IST
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவதற்காக மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவாதம் அளித்தார் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் விரைந்து வெளியேறுமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. ஏற்கெனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் 25,000 பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் செயலுக்கு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளா தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகிய கடும் கண்டனம் தெரிவித்தன. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே, அந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது என்று கருத்து பரவிவருகிறது. அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.


இந்தநிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா, காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கைச் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓமர் அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதையை நிலையை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், ஏதோவொன்று நடக்கிறது என்கிறார்கள். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. திங்கள்கிழமை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடிய பிறகு, எதற்காக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும்.

இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் இருப்பதற்கு மேற்கூறியவற்றை நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். காஷ்மீர் மாநித்துக்கான 35-ஏ, 370-வது பிரிவை ரத்து செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்று ஆளுநரிடம் கேட்டோம். அவர், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றார்.

Loading...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வார்த்தை இறுதி வார்த்தையல்ல. இந்திய அரசின் வார்த்தைதான் இறுதி வார்த்தை. எனவே, பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்ததை, இந்திய அரசு பொதுவெளியில் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான், மக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...