17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பி ஆக வெற்றி பெற்றுள்ளவர் ஓம் பிர்லா. பாஜக எம்.பி ஆன இவரை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக, மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்து முன்மொழிந்துள்ளது.
57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார். ஓம் பிர்லாவைப் பாராட்டி பிரதமர் மோடி பேசுகையில், “நான் ஓம் பிர்லா உடன் இணைந்து வெகு நாட்கள் பணியாற்றியுள்ளேன்.
கல்வியும் கற்றலும் நிறைந்த ஒரு மினி இந்தியா என்றே அழைக்கப்படும் கோட்டா தொகுதியின் பொறுப்பாளராக இருந்தவர் ஓம் பிர்லா. பொது வாழ்வில் மிக நீண்ட நாட்களாக இருந்து வருபவர். ஒரு மாணவர் தலைவராக தனது அரசியல் பணியைத் தொடங்கியவர். ஓய்வு இன்றி இன்று வரையில் சமூகப் பணியாற்றி வருகிறார்" என்றார்.
மேலும் பார்க்க: மக்களவையின் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.