‘என் கடினமான காலங்களில் உதவியவர்கள்’ - 150 லாரி ஓட்டுநர்களுக்கு விருந்து படைத்த மீரா பாய் சானு

மீரா பாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு தனக்கு உதவிய லாரி ஓட்டுநர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மீரா பாய் சானு.. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்றில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். வறுமையின் பிடியில் வாழ்க்கையை நகர்த்திய குடும்பத்தில் பிறந்து இன்று வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார். இதெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்க வில்லை.

    மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் கிராமத்தில் பிறந்தவர். மீரா பாய் சானுதான் வீட்டில் கடைக்குட்டி. சிறுவயது முதலே பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். விறகுகளை வெட்டி அவற்றை சுமந்து வந்து வறுமையை போக்க வேண்டிய சூழலில்தான் வளர்ந்தார்.

    Also Read:  ஜார்கண்ட் ஹாக்கி வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - ஹேமந்த் சோரன் அறிவிப்பு

    பள்ளிப்படிப்பும் மிகவும் சிரமத்துடனே படித்து வந்தார். பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது. பொருளாதார சூழல் காரணமாக இவரது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி மையத்துக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளது. தடைகளை எல்லாம் படிகளாய் மாற்றி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார்.

    மீரா பாய் சானு


    தனது கிராமத்தின் வழியே இம்பால் நகருக்கு மணல் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளில் லிஃப்ட் கேட்டு பயணித்துள்ளார். இந்த லாரி ஓட்டுநர்களும் பல வருடங்களாக மீரா பாய் சானுக்கு இலவச பயணம் வழங்கியுள்ளனர். ஓட்டுநர்களின் உதவியால் தடையின்றி தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார். ஓட்டுநர்கள் அளித்து இலவச பயணத்தால் அவருக்கு போக்குவரத்துக்கான செலவு மிச்சமானது. அந்தப்பணத்தின் மூலம் தனது ட்யட்டை பார்த்துக்கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு தனக்கு உதவிய அந்த லாரி ஓட்டுநர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    Also Read:  வெறுங்காலுடன் ஓடி கஷ்டப்பட்டவர்.. இரண்டாவது முறையாக ஒலிம்பிக் சென்றுள்ளான் - ஆரோக்கிய ராஜீவ் அம்மா நெகிழ்ச்சி

    லாரி ஓட்டுநர்கள்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 150 பேரை தனது வீட்டுக்கு அழைத்து உணவு பரிமாறி உபசரித்துள்ளார். அவர்களுக்கு சட்டை மற்றும் மணீப்பூர் ஸ்கார்ஃப் ஆகியவற்றை பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மீரா பாய் சானு, “வீட்டிலிருந்து பயிற்சி மையத்துக்கு எனக்கு வழக்கமாக லிஃப்ட் வழங்கிய லாரி ஓட்டுநர்களை பார்க்கவும் அவர்களின் ஆசிர்வாதத்தை பெறவும் விரும்பினேன். என் கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளை தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றியை தெரிவிக்க முயற்சிக்கிறேன்” என உணர்ச்சிப்பொங்க பேசினார்.

     



    மீராபாய் சானுவின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். மீரா பாய் உங்கள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருந்தவர்களை இப்போதும் நீங்கள் மறக்கவில்லை. உங்களுக்கு மிகப்பெரிய மனது. கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். நீங்கள் விளையாட்டில் மட்டுமல்ல மனிதநேயத்திலும் பலருக்கு முன் உதாரணமாக உள்ளீர்கள் எனப் பதிவிட்டுள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: