• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் மிகவும் பழமையான புத்தகக் கடைகள்!

இந்தியாவின் மிகவும் பழமையான புத்தகக் கடைகள்!

Book shop

Book shop

இந்தியாவின் எட்டு பழமையான புத்தகக் கடைகளின் பட்டியல் இங்கே.

  • Share this:
உலகமே டிஜிட்டல் மயமாக மாறிவரும் நேரத்தில், புத்தகங்களின் இடத்தை மின்-புத்தகங்கள், Kindle மற்றும் ஆடியோ புத்தகங்கள் பிடித்துள்ளன. இருந்தாலும். புத்தகங்கள் நிலை என்ன, எவ்வளவு பேர் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள், எதிர்காலத்தில் புத்தகங்கள் தேவை இருக்குமா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. எவ்வளவு மாறுதல்கள் வந்தாலும், புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையை எந்த மின் புத்தகமும் கொடுக்க முடியாது. அதே போல, வாசிக்கும் அனுபவமும். பல ஆண்டுகளாக புத்தகங்களை விற்பனை செய்து வரும், இந்தியாவின் எட்டு பழமையான புத்தகக் கடைகளின் பட்டியல் இங்கே.

சென்னை ஹிக்கின் பாதம்ஸ் :

சென்னையின் அடையாளங்களில் ஒன்று இந்த பழமையான புத்தகக்கடை. நூற்றாண்டு பாரம்பரியம் என்று கூறுவதை பல்வேறு பொருட்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலைகளோடு தொடர்புபடுத்தி பார்க்க முடியும். சென்னை ஹிக்கின் பாதம்ஸ் புத்தக நிலையம் 175 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் அமைச்சர்கள் முதல் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் சேவை செய்துள்ளது.

சென்னையில் உள்ள கிகில்ஸ் (Giggles)

1974 ஆம் ஆண்டு, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நளினி செத்தூர் இந்த புத்தகக்கடையைத் தொடங்கினார். சென்னையின், சிறிய கடைகளிலேயே மிகப்பெரிய கடை என்று அழைக்கப்படுகிறது.

Also Read:  காங்கிரஸ் தலைவர்களின் சீக்ரெட் பேச்சு.. அம்பலமான கமிஷன் பிசினஸ்.. சிக்கலில் டி.கே.சிவக்குமார்!

ஸ்டிராண்ட் புக் ஸ்டால், மும்பை

1940-களில், கொலாபாவில் மிகவும் பிரபலமாக இருந்த ஸ்டிராண்ட் சினிமாவில் ஒரு சிறிய புத்தகக் கியோஸ்க்காக தொடங்கப்பட்டது தான் இந்த ஸ்டிராண்ட் புத்தக நிலையம். மும்பையின் பெரிய புத்தகக்கடைகளில் ஒன்றாக வளர்ந்த ஸ்டிராண்ட் புத்தகக்கடை, எதிர்பாராத விதமாக 2018 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் மூடப்பட்டுவிட்டது.

டெல்லியில் உள்ள ராம் கோபால் ஷர்மா & சன்ஸ்

மலிவு விலையில் புத்தகங்கள் வாங்கவும், ப்ரீ-லவ்டு புக்ஸ் என்று கூறப்படும் ஏற்கனவே படித்த. பழைய புத்தங்களை வாங்குவதற்கும் சிறந்த இடம் இது. 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராம் கோபால் ஷர்மா & சன்ஸ் புத்தகக்கடையில் ஒரு நூலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:  உலகின் சிறந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

பாரிசன்ஸ் புக்செல்லர்ஸ், டெல்லி

டெல்லியின் பிரசித்தி பெற்ற கான் மார்க்கெட்டில், இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு பாரிசன்ஸ் புக்செல்லர்ஸ் தொடங்கப்பட்டது. மிகச்சிறிய புத்தகக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கடை, தற்போது டெல்லி NCR பகுதியில் மட்டுமே நான்கு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் உள்ள காலேஜ் ஸ்ட்ரீட்

இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்களை அளித்த கல்கத்தாவில் பாரம்பரிய புத்தகக் கடை இல்லாமல் இருக்காது. கொல்கத்தாவில் புத்தகக் கடை இல்லை. ஆனால் ஒரு காலனியே இருக்கிறது. புத்தகங்களின் காலனி என்று கூறப்படும் காலேஜ் ஸ்ட்ரீட்டில் மிகச்சிறியது முதல் பெரிய புத்தகக்கடைகள் வரை உள்ளன. உங்களுக்கு எங்கேயும் கிடைக்காத அரிதான புத்தகங்களைக் கூட மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Also Read:   முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் – அம்பலப்படுத்திய கடிதம்!

கேம்பிரிட்ஜ் புக் டெப்போ, முசோரி

புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் மிகவும் விரும்பும் புத்தக நிலையம், கேம்பிரிட்ஜ் புக் டெப்போ. 1952 ஆம் ஆண்டு, முசோரியின் தலைமை தபால் அலுவலகம் அருகில் தொடங்கப்பட்டது.

சிம்லாவில் உள்ள மரியா பிரதர்ஸ்

இந்த பழமையான புத்தகக் கடைகள் பட்டியலில், மிகவும் பழமையான புத்தகக் கடையாக இடம்பெற்றிருப்பது, சிம்லாவில் உள்ள மரியா பிரதர்ஸ்.

இந்த நிலையத்தில் மிகவும் அரிதான கலை பொருட்கள், புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் எங்கும் கிடைக்காத புத்தகங்கள் ஆகியவைக் கிடைக்கும். இந்த புத்தகக் கடையில் 15ம் ஆண்டு நூற்றாண்டு பொக்கிஷங்களும் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: