• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்.. வரி விதிப்பு எவ்வளவு? விபரம் இங்கே

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்.. வரி விதிப்பு எவ்வளவு? விபரம் இங்கே

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் அமலிற்கு வரும் போது எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Share this:
    காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 8 ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும், ஆண்டுதோறும் தகுதிச்சான்றிதழ் பெற்று பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன புதுப்பிப்பு சான்றிதழ் பெற வேண்டும். இந்நிலையில், புதிய திட்டத்தின் படி வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்திருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும்.

    இதன்படி, கார்களுக்கு 200 ரூபாயாக இருந்த கட்டணம், 7,500 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் 12,500 ரூபாயாகவும் உயர வாய்ப்புள்ளது. தனி நபர் பயன்படுத்தும் வாகனங்கள் 20 ஆண்டுகளை கடந்திருந்தால் 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும்.

    இதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு 300 ரூபாயாக இருந்த கட்டணம், 1000 ரூபாயாகவும், கார்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் 5000 ரூபாயாகவும் உயரலாம் என தெரிகிறது. இது தவிர சாலை வரியுடன் வசூலிக்கப்படும் பசுமைக் கட்டணமும் 10 முதல் 25 சதவிகிதம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

    மேலும் படிக்க...திண்டுக்கல் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

    இந்த திட்டம் அமலானதிற்கு பின் பழைய வாகனங்களை பயன்படுத்துவோர் அதிகமான வரிச்சுமைக்கு ஆளாவர். அதனால், பழைய வாகனங்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விடும் என மத்திய அரசு கருதுகிறது. கொரோனாவிற்கு முன்பிருந்தே மந்தகதியில் இயங்கி வந்த ஆட்டோமொபைல் துறையில் அபரிமிதமான வளர்ச்சியும் இதனால் ஏற்படும் என நம்பப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: