முகப்பு /செய்தி /இந்தியா / "ஓ சாரி... மாறிப்போன வார்த்தை..." - நிர்மலா சீதாராமன் பேச்சால் நாடாளுமன்றத்தில் எழுந்த சிரிப்பலை!

"ஓ சாரி... மாறிப்போன வார்த்தை..." - நிர்மலா சீதாராமன் பேச்சால் நாடாளுமன்றத்தில் எழுந்த சிரிப்பலை!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வருமான வரி செலுத்துவோருக்கு வரி உச்சவரம்பை அதிகரித்து வெளியிட்ட அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கும்போது அவர் பொல்யூட்டிங் என்பதற்கு பதிலாக பொலிட்டிகல் என கூறியது காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததாக சமூகவலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது.

2023-24 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மோடி அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், ஜன்தன் திட்டங்களின் சாதனைகளை நிதியமைச்சர் பட்டியலிட்டார். மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக வருமான வரி செலுத்துவோருக்கு வரி உச்சவரம்பை அதிகரித்து வெளியிட்ட அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்போது காலவதியான பழைய வாகனங்களை அகற்ற மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார். இது தொடர்பாக பேசுபோது, “பழைய பொலிட்டிக்கல் (அரசியல்).. மன்னிக்கவும்.. பொல்யூட்டிங் (மாசுபடுத்தும்) வாகனங்களை அப்புறப்படுத்தவது காற்றுமாசை கட்டுப்படுத்துவதில் முக்கிய தேவையாகும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

.

இதை சொல்லும்போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.  ‘பழைய கட்சிகளை அகற்றுவது’ என நிர்மலா சீதாராமன் காங்கிரஸை சாடியுள்ளதாக பலரும் இணையத்தில் விமர்ச்சித்துவருகிறார்கள்.

First published:

Tags: Congress, Nirmala Sitharaman, Union Budget 2023