ஹோம் /நியூஸ் /இந்தியா /

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த இமாச்சல் அரசு.. !

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த இமாச்சல் அரசு.. !

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு

ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இமாச்சலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சுக்விந்தர் சுகு பதவியேற்றார்.

தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்தது. அக்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதி முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இமாச்சலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் சுக்விந்தர் சுகு தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு ஊழியர்களுக்கு லோஹ்ரி பண்டிகை பரிசாக இது வழங்கப்படுவதாக முதலமைச்சர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவின் மூலம் 1.36 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த முடிவால் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.800-900 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று முதலமைச்சர் சுக்விந்தர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தேவையற்ற செலவுகளை குறைத்து, வருவாயை அதிகரிப்பதன் மூலம் இதை அரசு சமாளிக்கும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதேபோல், மற்றொரு தேர்தல் வாக்குறுதியான 18-60 வயது பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என்ற வாக்குறுதியை விரைவில் அமல்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உலகின் நீளமான நீர்வழி சொகுசு கப்பல் பயணம் - வராணசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் 4ஆவது மாநிலம் இமாச்சலப் பிரதேசமாகும். ஏற்கனவே, சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்கள் அமலில் உள்ளன. இதில் பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. பஞ்சாப்பிலும் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் இருந்தது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்ந்து ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.

First published:

Tags: Himachal CM, Himachal Pradesh