கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு முன்பே ‘கொரோனா’ என பெயரிட்ட கடை..!

எதிர்காலத்தில் தனது சிறிய கடை அதன் பெயரால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எனக்கு தெரியாது. இப்போது இந்த பெயர் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது என்கிறார் உரிமையாளர் ஜார்ஜ்.

கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு முன்பே ‘கொரோனா’ என பெயரிட்ட கடை..!
கேரள கடை பெயர் டி கோரோனா
  • News18
  • Last Updated: November 20, 2020, 8:10 PM IST
  • Share this:
கேரளாவின் கோட்டயத்தில் கொரோனா என பெயர் கொண்ட கடை தற்போது அதிக பேரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா என பெயர்  வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர் வருகை தருகின்றனர். இந்த கடையில் வீட்டு அலங்கார பொருட்கள், தாவரங்கள், பானைகள், விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை அவர் விற்பனை செய்து வருகிறார். 

தற்போது உலகையே புரட்டி போட்ட தொற்றுநோயான கொரோனா வைரஸ் என்ற பெயரும், இந்த கடையின் பெயரும் ஒன்றும் என்பதால் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதுகுறித்து செய்தி நிறுவனமான ன் தகவலின் படி, கடையின் பெயர் தற்போதைய கொரோனா வைரஸ் உடன் தொற்றுநோயுடன் தொடர்புடையது என்பதால் கடை நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது.

கொரோனா என்ற பெயரின் பெயர் ஈர்ப்பு காரணமாக தினந்தோறும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகின்றனர், வர்த்தகமும் நன்றாக வளர்ந்து வருகிறது என்று கொரோனா கடை உரிமையாளர் ஜார்ஜ் தெரிவித்தார். லத்தின் மொழியில் அதற்கு கிரீடம் என்று பொருள். நான் வீட்டு அலங்கார பொருட்களை விற்பனை செய்வதால் கொரோனா ஸ்டோர் என்று பெயரிட்டேன்.

Also read... பள்ளிகள், கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய அடிப்படை சுகாதார நடைமுறைகள்..எதிர்காலத்தில் தனது சிறிய கடை அதன் பெயரால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எனக்கு தெரியாது. இப்போது இந்த பெயர் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது என்கிறார் உரிமையாளர் ஜார்ஜ். இந்த கடையின் புகைப்படங்கள் ட்விட்டேர் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் கடை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது தெரிகிறது புகைப்படங்களில், கடை அதன் பிரத்யேக சேகரிப்பின் ஒரு பகுதியாக காட்சிக்கு தாவரங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

உலகம் முழுவதும் கோவிட் -19 பரவலுக்கு பின்னர் தோன்றிய பெயர் பொருத்தத்தின் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். முன்னதாக கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், தொற்றுநோய்க்குப் பின்னர் அவரது பெயர் மக்களுக்கு நகைச்சுவையாக மாறியுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading