அதிகாரிகளின் தலையில் மூங்கில் தடியால் அடியுங்கள்: பாஜக மத்திய அமைச்சர் அதிரடிப் பேச்சு

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

“இளைஞர்கள் அரசை விமர்சித்தாலோ, சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தாலோ ஜெயிலுக்குப் போவீர்கள், வேலை கிடைக்காது என்று நிதிஷ் குமார் மிரட்டுகிறார்.

 • Share this:
  மத்திய பாஜக ஆட்சியின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர், அதிகாரிகள் தலையில் பிரம்பால் அடியுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

  பீஹார் மாநிலம், பெகுசராய் தொகுதி எம்.பி.,யான கிரிராஜ் சிங் கிஷோர், பெகுசராயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இவ்வாறு சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

  மேலும் அவர், என் தொகுதியில் அதிகாரிகள் சிலர், மக்களின் குறைகளை அலட்சியப்படுத்துவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது போன்ற சிறிய விஷயங்களை நிறைவேற்றத் தான், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.அவர்கள் அனைவரும், மக்கள் பணி செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

  கோரிக்கைகளுக்கு, அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், மூங்கில் தடியால் அவர்களது தலையில் மக்கள் அடிக்க வேண்டும். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால், பிரச்னையை என்னிடம் கூறுங்கள்; நான், என் பலத்தைக் காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கிரிராஜ் சிங் கிஷோரின் இந்தப் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  இப்படி அராஜகமாக வன்முறையைத் தூண்டும் விதமாக மத்திய அமைச்சர் பேசியிருக்கிறாரே என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேட்க அவர், “அவர் பேசியது நியாயம்தானா என்பதை அவரிடமே கேளுங்கள்” என்று பதிலளித்து கையை விரித்தார்.

  இந்த இருவரது கருத்து தொடர்பாகவும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் விமர்சனங்களை முன் வைத்த போது, “இளைஞர்கள் அரசை விமர்சித்தாலோ, சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தாலோ ஜெயிலுக்குப் போவீர்கள், வேலை கிடைக்காது என்று நிதிஷ் குமார் மிரட்டுகிறார்.

  பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் அதிகாரிகளை பிரம்பால் அடித்துக் கொல்லுங்கள் என்கிறார்.” என்று சாடியுள்ளார்.

  காங்கிரஸ் அரசு கிரிராஜ் சிங்கைக் கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த பாஜக தலைவர்களோ, இது உணர்ச்சிவயப்பட்ட பேச்சு அவ்வளவே என்று அடக்கி வாசிக்கிறார்கள்.
  Published by:Muthukumar
  First published: