கேரளாவில் யானைக்காக அணையின் மதகுகளை மூடிய அதிகாரிகள்!

கேரளாவில் யானைக்காக அணையின் மதகுகளை மூடிய அதிகாரிகள்!
யானை (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:22 PM IST
  • Share this:
காட்டுப்பகுதியில் உள்ள யானையை வெள்ளம் அடித்துச்செல்லாமல் இருக்க, அணையின் ஷட்டர்களை அதிகாரிகள் மூடியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, யானை ஒன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகில் சல்லகுடி நதியில் நின்றுகொண்டிருந்தது. அதிக மழையால் பாறைகள் வழுக்க, யானை நகர முடியாமல் நீண்டநேரமாக ஒரே இடத்தில் இருந்துள்ளது. முதலில் அதைக் கண்ட அப்பகுதி மக்கள், என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அதன்பின் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த யானை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகே சோர்வாக நின்றுகொண்டிருந்தது. 24 மணி நேரமாக யானை அங்கு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், யானையைச் சுற்றி நீர் இருந்ததாலும், பாறை மிகவும் வழுக்கியதாலும் அதனால் நகரமுடியவில்லை.

இதையடுத்து, பெரிங்கால்குத்து அணை நிர்வாகிகளை சந்தித்த வனத்துறையினர் 2 மணி நேரம் அணையின் கதவுகளை மூடிவைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.

நீரின் வருகை சற்று தணிந்தபிறகு, பட்டாசுகளை வெடித்து அந்த யானையை காட்டுக்குள் அனுப்பி வைத்தனர். ஒரு யானைக்காக அணையின் மதகுகள் மூடப்பட்ட மனிதநேயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
First published: August 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading