விமானநிலையத்தில் சல்மான் கானை தடுத்து நிறுத்திய அதிகாரிக்கு நெருக்கடியா? - விளக்கமளித்த சி.ஐ.எஸ்.எஃப்

சல்மான் கான்

சல்மான் கானை தடுத்து நிறுத்திய அதிகாரி பாரட்டப்பட்டார் என்று சி.ஐ.எஸ்.எஃப் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  டைகர் 3 படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் உள்ளிட்ட படக்குழு நேற்று ரஷ்யா செல்ல மும்பை விமான நிலையத்துக்கு விரைந்தனர். நடிகர் சல்மான் கான் காரை விட்டு இறங்கியதை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், அவரை போட்டோ எடுக்கவும் முண்டியடித்தனர். பின்னர், முகக்கவசத்தை அணிந்துகொண்டு சென்ற சல்மான் கான், செக்கிங் ஏரியாவுக்கு சென்றது முகக் கவசத்தை கழட்டிவிட்டு உள்ளே நுழைய முயற்சித்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Viral Bhayani (@viralbhayani)

  சல்மான் கானுக்கு சோதனை செய்யப்படாமல் உள்ளே நுழைவதை அறிந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர் ஒருவர் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவியது.


  இந்தநிலையில், சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த சி.ஐ.எஸ்.எஃப், ‘சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. உண்மையில், சிறந்தமுறையில் பணியாற்றியதாக அவர் பாராட்டப்பட்டார்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: