• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘ஊருக்கே உணவு கொடுக்குறீங்க... பட்டினியோட போகாதீங்க..’- டெலிவரி நபர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனம்

‘ஊருக்கே உணவு கொடுக்குறீங்க... பட்டினியோட போகாதீங்க..’- டெலிவரி நபர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனம்

டெலிவரி ஊழியர்கள்

டெலிவரி ஊழியர்கள்

ஹைதராபாத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் கூரியர் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகிறது ஒரு நிறுவனம்.

  • Share this:
    இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் சீறிப்பாயும் இருசக்கர வாகனங்களை கவனித்தால் அதில் பாதிக்கும் மேற்பட்ட வாகனம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாகனங்களாகத் தான் இருக்கும். உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெறப்படும் உணவுகளை ஆர்டர் செய்த நபர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதால் கடுமையான கூட்ட நெரிசல்களிலும் சீறிப்பாயும் இவர்களது வாகனங்கள். உணவு டெலிவரி கொடுத்துவிட்டு‘சார் ரேட்டிங் பார்த்து போடுங்க என கெஞ்சலாக கேட்டுசெல்வார்கள்..’

    கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் உணவகங்கள் திறந்துக்கொள்ள சில மாநிலங்களில்  அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் அமர்ந்து உண்ணக்கூடாது பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இந்த டெலிவரி ஊழியர்கள். நமக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கும் இந்த ஊழியர்கள் சாப்பிட்டு இருப்பார்களா என்று கூட தெரியாது. டீக்கடைகளிலோ, ஆட்டோ ஸ்டாண்டுகளிலோ, தெரு ஓரங்களிலோ கிடைக்கும் நேரத்தில் அதே பரபரப்புடன் தங்களுக்கான உணவை எடுத்துக்கொண்டிருப்பார்கள். சிலர் பணி சூழல் காரணமாக உணவு எடுத்துக்கொள்ளாமலும் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் காலில் சக்கரங்களை கட்டிக்கொண்டுதான் சுற்றுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ இண்டி போஜனம் என்ற உணவகமும், ஷ்ரீட் பைட் என்ற யூடியூப் சேனலும் இணைந்து உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் கூரியர் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு பெகும்பேட் பகுதியில் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். கடந்த மே 25-ம் தேதியில் இருந்து இந்த பணியை செய்து வருகிறார்கள். முதல்நாள் 40 உணவு பொட்டலங்களுடன் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு நாளைக்கு 100-க்கு மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர்.

    Also Read: ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 13 மளிகை பொருட்கள் என்னென்ன?

    வாட்ஸ் அப் க்ரூப் மூலம் இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவித்துள்ளனர். உணவு பொட்டலங்களுடன் தண்ணீர் பாட்டில்களையும் விநியோகம் செய்கின்றனர். சிக்கன்பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து பேசிய ஸ்ரீ இண்டி போஜனம் உணவகத்தை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண பிரசாத், ‘இந்த ஊரடங்கு முடியும் வரை டெலிவரி நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது என முடிவு செய்துள்ளோம். இது ஸ்ட்ரிட் பைட் ரவியின் யோசனைதான். இந்த டெலிவரி நபர்கள் எல்லோருக்கும் உணவு வழங்குகிறார்கள் ஆனால் அவர்கள் பட்டினியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றார். டெலிவரி ஊழியர் சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமே உணவு வழங்குகிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு தயார் செய்ய முடியாத நபர்களுக்கு இவர்கள் உணவு வழங்குகிறார்கள்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: