ஹோம் /நியூஸ் /இந்தியா /

புல்வாமா தாக்குதலை ஆதரித்து பேஸ்புக் போஸ்ட்.. பொறியியல் மாணவனுக்கு 5 ஆண்டு சிறை

புல்வாமா தாக்குதலை ஆதரித்து பேஸ்புக் போஸ்ட்.. பொறியியல் மாணவனுக்கு 5 ஆண்டு சிறை

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்

குற்றவாளியின் செயல் உன்னத தேசத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும் - நீதிபதி

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட  தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 23 வயது நிரம்பிய பொறியியல் மாணவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் மத்திய ரிசேர்வ் போலிஸ் படை பாதுகாப்பு அணி (CRPF) மீது  பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூரமான தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும்  ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு இருப்பதாக இந்திய தெரிவித்து வருகிறது. மேலும், புல்வாமா தாக்குதலில் முக்கிய நபராக கருதப்படும் முகமது மொய்தீன் என்பவனை பயங்கரவாதியாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்தது.

  இந்த  தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ரஷீத் என்ற கல்லூரி மாணவன் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A (மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்தல்), தேசத்துரோக சட்டப்பிரிவு 124A , 201 (சாட்சியத்தை அழித்தல்) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

  இதையும் வாசிக்கஅறுந்து தொங்கும் குஜராத் மாடல்... அண்ணாமலைகள் இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள் - முரசொலி கடும் விமரசனம்!

  பிணை மறுக்கப்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை வாசித்தது. நீதிபதி  தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட நபர் கல்வியறிவு கொண்டவர்.  குற்றம் நடந்த சமயத்தில் பொறியியல் மாணவராக இருந்துள்ளார்.

  நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் புல்வாமா தாக்குதல் குறித்து உள்நோக்கத்துடன் பேஸ்புக்கில் குற்றவாளி  பதிவிட்டுள்ளார். 40 மத்திய ரிசேர்வ் பாதுகாப்பு  வீரர்களுக்கு ஒட்டு மொத்த தேசமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ஆனால், இந்த தாக்குதலை ஆதரித்து, மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார். உன்னத தேசத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும். குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதத் தொகையும் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.  

  Published by:Salanraj R
  First published:

  Tags: Pulwama, Pulwama Attack