ஒடிசாவைச் சேர்ந்த 26 வயது கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ஸ்ரீ ஸ்வைன். இவர் ஒடிசாவின் பஜ்ரகபட்டி பகுதியில் அம்மாநில அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருந்தார். இந்த முகாமில் 25 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இதில் இருந்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்கும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஜனவரி 10ஆம் தேதி அன்று ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ராஜஸ்ரீ இடம்பெறவில்லை. இதனால் ராஜஸ்ரீ விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 10 தேதி அன்று, தனது பயிற்சியாளரிடம் தந்தையை பார்க்க வீட்டுக்கு செல்வதாக கூறி பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார். ஆனால், அதன் பின்னர் ராஜஸ்ரீ மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜஸ்ரீயை காணவில்லை என ஒடிசா மாநில கிரிக்கெட் சங்கம் காவல்துறையில் 11ஆம் தேதி புகார் அளித்தது.
தொடர்ந்து ராஜஸ்ரீயின் செல்போன் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில், குருதிஜாதியா என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜஸ்ரீ நேற்று சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை, மரணத்திற்கான பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாட்டிங் போர்.. வீடியோ கால் பேசலாமா..! ஆசையை தூண்டி தொழிலதிபரிடம் ரூ.2.69 கோடியை சுருட்டிய கில்லாடி பெண்
அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் ராஜஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், ராஜஸ்ரீயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்கு ராஜஸ்ரீ செல்ல வேண்டிய தேவை என்ன போன்ற சந்தேகங்களை அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். வீராங்கனையின் மரணம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer, Death probe, Mysterious death, Odisha