மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின், சினிமாவில் உலக அளவிலான பங்களிப்பை பாராட்டி ஒடிசா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் சிதாப்பூரில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நவின் பட்நாயக், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
கமல்ஹாசனின் கலை மற்றும் சினிமா வாழ்க்கையை பாராட்டி இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாகவும், செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதல் கவுரவ டாக்டர் இது என்றும் பெருமிதம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று புவனேஸ்வர் சென்ற கமல்ஹாசன், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.