மாணவனின் குரலுக்கு செவிசாய்த்த ஒடிசா அரசு - பேருந்து நேரத்தை உடனடியாக மாற்றிய அதிகாரிகள்!

மாணவனின் குரலுக்கு செவிசாய்த்த ஒடிசா அரசு - பேருந்து நேரத்தை உடனடியாக மாற்றிய அதிகாரிகள்!

பள்ளி மாணவனின் கோரிக்கையை ஏற்று, அதனை உடனடியாக பரிசீலித்து அவருக்காக பேருந்து சேவையை மாற்றியமைத்த ஒடிசா மாநகர பேருந்து கழகத்தின் சேவையை இணையவாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பள்ளி மாணவனின் கோரிக்கையை ஏற்று, அதனை உடனடியாக பரிசீலித்து அவருக்காக பேருந்து சேவையை மாற்றியமைத்த ஒடிசா மாநகர பேருந்து கழகத்தின் சேவையை இணையவாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேருந்து நாள்தோறும் தாமதமாக வருவதால், பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என மாணவர் ஒருவர் டிவிட்டரில் அளித்த புகாருக்கு ஒடிசா அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

புவனேஸ்வரில் வசிக்கும் சாய் அன்வேஷ் அம்ருதன் பிரதான், MBS பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார். நாள்தோறும் பள்ளி நேரம் காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், மாணவன் சாய் அவினேஷ் வசிக்கும் பகுதியில் முதல் பேருந்து காலை 7.40 மணிக்கு மேல் இயக்கப்படுகிறது. இதனால், காலை நேரத்தில் பள்ளிக்கு நாள்தோறும் தாமதமாக சென்றுள்ளார். இது குறித்து ஐ.பி.எஸ் அதிகாரிக்கும், போக்குவரத்து கழகத்துக்கும் டிவிட்டர் மூலம் புகார் ஒன்றை அனுப்பினார். 

அவரின் கோரிக்கையை ஏற்று, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது, இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. சமூகவலைதளமான டிவிட்டரில் மாணவன் சாய் அன்வேஷ் அம்ருதன், " மதிப்பிற்குரிய ஐயா, நான் புவனேஸ்வரில் உள்ள எம்.பி.எஸ் பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறேன். காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அரசுப் பேருந்தை பயன்படுத்தி வருகிறேன். பள்ளி நேரம் காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், நான் வசிக்கும் ரூட் நம்பர் 13-ல் லிங்கப்பூர் பகுதியில் இருந்து முதல் பேருந்து சேவை காலை 7.40 மணிக்கு தான் தொடங்குகிறது. 

Also read... பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

பேருந்து இல்லாத காரணத்தால், நான் தினமும் பள்ளிக்கு காலதாமதமாக சென்று வருகிறேன். இது குறித்து அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" பதிவிட்டிருந்தார்.  மாணவன் சாய், தன்னுடைய இந்தப் புகாரை ஒடிசா பேருந்து கழகத்துக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் போத்ராவுக்கும் Tag செய்திருந்தார்.மாணவனின் டிவிட்டை பார்த்த இணையவாசிகள் ஏராளமானோர், ரீ டிவீட் செய்தனர். இதனால், மாணவன் கோரிக்கை அரசின் கவனத்துக்கு சென்றதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் இணையதளம் மூலமாக உடனடியாக பதில் அளித்தது. அதில், 'உங்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பியுள்ளோம், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியது. இதேபோல், மாணவனின் டிவிட்டர் கோரிக்கைக்கு பதில் அளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி போத்ரா,' உங்களைப் போன்றவர்களின் அன்புடன் மோ பஸ் சேவை நாள்தோறும் பயணித்து வருகிறது. உங்கள் பேருந்து வழித்தடத்தில் வரும் திங்கள் முதல் காலை 7 மணிக்கு முதல் பேருந்து சேவை தொடங்கும். இனி நீங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டியது இருக்காது', என பதிலளித்தார்.பள்ளி மாணவனின் கோரிக்கையை ஏற்று, அதனை உடனடியாக பரிசீலித்து அவருக்காக பேருந்து சேவையை மாற்றியமைத்த ஒடிசா மாநகர பேருந்து கழகத்தின் சேவையை இணையவாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் புவனேஸ்வர் நகரில் Mo Bus சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: