HOME»NEWS»NATIONAL»odisha transport department changed bus timings after boy complained of getting late for school aru

‘ஸ்கூலுக்கு லேட் ஆகுது’ - மாணவரின் கோரிக்கையை ஏற்று பேருந்து நேரத்தை மாற்றிய ஒடிசா போக்குவரத்து கழகம்

தினமும் பள்ளிக்கு லேட்டாக செல்வதற்கு பேருந்து நேரமே காரணம் என ட்விட்டரில் அரசின் கவனத்திற்கு மாணவர் எடுத்துச் சென்றார்.

‘ஸ்கூலுக்கு லேட் ஆகுது’ - மாணவரின் கோரிக்கையை ஏற்று பேருந்து நேரத்தை மாற்றிய ஒடிசா போக்குவரத்து கழகம்
தினமும் பள்ளிக்கு லேட்டாக செல்வதற்கு பேருந்து நேரமே காரணம் என ட்விட்டரில் அரசின் கவனத்திற்கு மாணவர் எடுத்துச் சென்றார்.
  • Share this:

ஒடிசாவில் தினமும் பள்ளிக்கு லேட்டாக செல்வதற்கு பேருந்து நேரமே காரணம் என ட்விட்டரில் அரசின் கவனத்திற்கு மாணவர் எடுத்துச் சென்றார்.

பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை என ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்த மாணவரின் கோரிக்கையை ஏற்று பேருந்தின் நேரத்தை ஒடிசா மாநில அரசு மாற்றியமைத்திருப்பது சமூக வலைத்தளவாசிகளின் மனங்களை வென்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரைச் சேர்ந்தவர் சாய் அன்வேஷ் அம்ருதம் பிரதான். அங்குள்ள எம்பிஎஸ் பப்ளிக் எனும் பள்ளியில் படித்துவரும் மாணவரான சாய், ட்விட்டரில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினார், அதில் மாநகர பேருந்தின் நேரம் மாற்றப்பட்டிருப்பதால், நான் தினமும் பள்ளிக்கு காலதாமதமாக செல்வதாகவும் பதிவிட்டிருந்தார்.





இது தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் மாணவர் சாய், போக்குவரத்து பிரிவு ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா மற்றும் புவனேஸ்வர் மாநகர போக்குவரத்து பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து வெளியிட்ட பதிவில்,

மதிப்பிற்குரிய ஐயா, நான் புவனேஸ்வரின் உள்ள எம்பிஎஸ் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவன். தினமும் பள்ளிக்கு செல்ல அரசுப் பேருந்தையே (மாநகர பேருந்து) பயன்படுத்துகிறேன். தற்போது நான் செல்லும் பேருந்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



நான் பள்ளியில் சரியாக காலை 7.30 மணிக்கெல்லாம் இருக்க வேண்டும். ஆனால் நான் பயணிக்கும் ரூட் நம்பர் 13-ல் லிங்கப்பூரில் இருந்து முதல் பேருந்து சேவை காலை 7.40 மணிக்கு தான் தொடங்குகிறது.

இதன் காரணமாக நான் எனது பள்ளிக்கு தினமும் காலதாமதமாக சென்று வருவதால் எக்கச்சக்க பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். தயவு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என பதிவிட்டிருந்தார்.

பள்ளி மாணவர் சாயின் ட்வீட், சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. என்னற்றோர் மாணவர் சாயின் ட்வீட்டை ரிடீவிட் செய்தனர். இதனிடையே மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மாணவருக்கு பதில் அளித்தது, அதில் மேற்கண்ட உங்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பியுள்ளோம், இது தொடர்பாக பரிசீலிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

அதே நேரத்தில் ஐஏஎஸ் அதிகாரி போத்ரா மாணவரின் ட்வீட்டை பார்த்ததுடன் அவருக்கு அளித்த பதிலில், மோ பஸ் சேவை தினமும் உங்களை போன்றவர்களின் அன்புடன் பயணித்து வருகிறது. உங்கள் பேருந்து வழித்தடத்தின் முதல் பேருந்து சேவை வரும் திங்கள் முதல் காலை 7 மணிக்கு தொடங்கும். இனி நீங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லவேண்டியிருக்காது. மாநகர போக்குவரத்து கழகத்தினரின் அனைத்து அன்புடனும்!” என பதிலளித்துள்ளார்.

பள்ளி மாணவரின் கோரிக்கையை கணிவுடன் பரிசீலித்து அவருக்காக பேருந்து சேவை நேரத்தை மாற்றியமைத்த மாநகர போக்குவரத்து கழகத்தினரை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: