ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒருதலைக் காதல்! இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

ஒருதலைக் காதல்! இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அவரது உடல் காயத்தின் அளவு 50% அதிகமாக இருந்ததால், எம்.கே.சி.ஜி என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், அங்கிருந்து கட்டாக்கிலுள்ள ஒடிசாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஓடிசாவில் காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் மீது ஒருதலையாக காதல் செய்த இளைஞர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். மருத்துவமனையில் உயிருக்கப் போராடிய அந்தப் பெண் இன்று உயிரிழந்தார்.

  ஒடிசா மாநிலம் தெற்கு கோராபுட் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் பட்டய பொறியியல் படிப்பு படித்துவருகிறார் 17 வயது பெண். கடந்த மே 31-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த, கோபிநாத் காரா என்ற இளைஞர் அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

  அந்தப் பெண் மீது தீ பற்றியதை உறுதி செய்த இளைஞர், வீட்டிலிருந்து தப்பித்து ஓடினார். தீக் காயத்தினால் பாதிக்கப்பட்ட பெண், கோராபுட் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் காயத்தின் அளவு 50% அதிகமாக இருந்ததால், எம்.கே.சி.ஜி என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், அங்கிருந்து கட்டாக்கிலுள்ள ஒடிசாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

  அந்தப் பெண் இன்று மாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மேல்பகுதி உடல் கடுமையாக தீக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. அவருடைய முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருந்தன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக இருந்த பெண்ணின் மீது தீ வைத்த இளைஞர், காவல்நிலையத்தில் சரண்டரானர்.

  உயிரிழந்த இளம் பெண்ணைக் காதலித்த கோபிநாத் காரா, அவரிடம் பலமுறை காதலைத் தெரிவித்துள்ளார். அவருடைய காதலை இளம் பெண் நிராகரித்த நிலையில், பெண்ணின் மீது தீவைத்துள்ளார். இந்தச் சம்பவம் ஒடிசாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Love failure