ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் அந்த தம்பதியினர் செங்கல் சூளையில் கூலி வேலை பார்ப்பதற்காக ஒடிசாவில் இருந்து ராஜஸ்தான் சென்றுள்ளனர். அங்கு பணியில் சேர்ந்த ஒரு சில நாட்களில், ரூ.1.80 லட்சத்திற்கு அந்த சிறுவன் தனது மனைவியை 55 வயது நபருக்கு விற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த தொகையில் தனது சாப்பாட்டிற்கு தேவையான பணத்தை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதம் இருந்த பணத்திற்கு ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, சிறிது நாட்கள் கழித்து தனது கிராமத்திற்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளார்.
கிராமத்திற்கு திரும்பியவர் தனியாக வந்ததை பார்த்த மனைவியின் உறவினர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு மனைவி தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டதாக அவர் உறவினர்களிடமும், கிராமத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.
அவர் சொல்லிய கதையை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண்ணின் உறவினர்கள், காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த இளைஞரை அழைத்து விசாரித்துள்ளனர். தொடர்ந்து அவரின் செல்போன் அழைப்புகளை சரிபார்த்தனர். அந்த இளைஞன் மனைவி விட்டுவிட்டு சென்றதாக குறிப்பிடும் தகவலில் உண்மையில்லை என்பதை உணர்ந்தனர்.
இதையடுத்து, போலீசார் அவர்கள் பாணியில் விசாரிக்க அவர் மனைவியை விற்றதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஒடிசா போலீஸ் குழுவினர் அந்த பெண்ணை கண்டுபிடிக்க ராஜஸ்தான் சென்றனர். அங்கு பலங்கிர் என்ற கிராமத்தில் அந்த பெண் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, பெண்ணை மீட்க அந்த கிரமாத்திற்கு சென்ற போது, அந்த கிராமத்தினர் பெண்ணை அழைத்துச்செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் அந்த பெண்ணை பணம் கொடுத்து வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அனுப்ப மறுத்துள்ளனர். பின்னர் மிகுந்த சிரமப்பட்டு அவரை அங்கிருந்து போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அந்த 17 வயது நபர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.