Home /News /national /

ஒடிசாவில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பங்களை வரைந்து வாழ்த்து தெரிவித்த கலைஞர்..

ஒடிசாவில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பங்களை வரைந்து வாழ்த்து தெரிவித்த கலைஞர்..

ஒடிசாவில் ஜோ பைடன், கமலா ஹாரீசுக்கு மணல் சிற்பம்

ஒடிசாவில் ஜோ பைடன், கமலா ஹாரீசுக்கு மணல் சிற்பம்

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமெரிக்க அதிபர், துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும், துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். அவரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது வாழ்த்தை டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீக்கும்  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமாக உள்ளனர்.



    இந்நிலையில் பிரபலமான மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில்  உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பம்  25 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது/.

    ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரீஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மணல் சிற்பத்தை உருவாக்கியதாகவும், இதை வடிவமைக்க 6 மணி நேரம் ஆனது என்றும், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Odisa, Sand sculptures

    அடுத்த செய்தி