ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளால் தயாரிக்கப்பட்ட பூரி ஜெகன்நாதரின் மினியேச்சர் சிலை- இளைஞர் அசத்தல்!

ஜெகன்நாதரின் கஜானனா பெஷா அலங்கார உருவத்தை மினியேச்சர் சிலையாக உருவாக்க பிஸ்வஜித் நாயக், சுமார் 1,475 ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளை பயன்படுத்தி உள்ளார்.

ஜெகன்நாதரின் கஜானனா பெஷா அலங்கார உருவத்தை மினியேச்சர் சிலையாக உருவாக்க பிஸ்வஜித் நாயக், சுமார் 1,475 ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளை பயன்படுத்தி உள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு பலருக்கு கலை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. வீடுகளுக்குளேயே முடங்கி கிடைப்பதால் ஏற்படும் சோர்வை போக்க தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பலர் மேலும் மெருகேற்றி கலை மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சமூக வலைதளங்களின் மூலம் வெளிப்படுத்தினர். இசை, நடனம் மட்டுமின்றி பிற கலைகள், கைவினை பொருட்கள் தயாரிப்பு, சமையல்கலை மற்றும் யோகா போன்ற பிற திறமைகளையும் பலர் வெளிக்காட்டினர்.

அந்த வகையில் ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்வஜித் நாயக் என்பவர் அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் உலக புகழ்பெற்ற ஜெகன்நாதரின் "கஜானனா பெஷா"(Gajanana Besha) அதாவது கஜானனா எனப்படும் அலங்காரத்தில் இருப்பது போன்ற ஒரு மினியேச்சர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளார்.

நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி ஜெகன்நாதர் கோயில், விஷ்ணு பகவானின் ஒரு வடிவமான ஜெகன்நாத்திற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய இந்து கோவிலாகும். ஒடிசாவின் சுவாரஸ்யமான நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. பூரி கோயிலில் நடைபெறும் வருடாந்திர தேர் திருவிழா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக பல வாரங்கள் மூடப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டு கோயில் கடந்த வாரம் திறக்கப்பட்டது.மினியேச்சர் சிலையின் சிறப்பம்சம்:

ஜெகன்நாதரின் கஜானனா பெஷா அலங்கார உருவத்தை மினியேச்சர் சிலையாக உருவாக்க பிஸ்வஜித் நாயக், சுமார் 1,475 ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளை பயன்படுத்தி உள்ளார். 30 அங்குல உயரமும் 26 அங்குல அகலமும் கொண்ட இந்த மினியேச்சர் சிலையை செய்து முடிக்க பிஸ்வஜித் நாயக்கிற்கு சுமார் 15 நாட்கள் ஆகியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பிஸ்வஜித் நாயக், தேவஸ்னனா பூர்ணிமா தினத்தன்று இந்த மினியேச்சர் சிலையை பக்தர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக கூறி உள்ளார். பட்டதாரியான பிஸ்வஜித் நாயக், பூரி மாவட்டத்தின் குமுதிபட்னா கிராமத்தைச் சேர்ந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பக்தர்களின்றி ஸ்னனா யாத்திரை நடத்தப்பட உள்ள நிலையில் கொரோனா தொற்றை நம் எல்லோரது வாழ்விலிருந்தும், நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றி துயர் துடைக்குமாறு ஜெகநாத் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருவதாக பிஸ்வஜித் நாயக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தொற்று நோய் சூழல் காரணமாக ஸ்னனா யாத்திரையின் போது பலரும் ஜெகன்நாத் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, தனது கலைப்படைப்பு மூலம் மக்கள் கடவுளிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் வகையில் இந்த மினியேச்சர் சிலையை உருவாக்க முடிவு செய்ததாக பிஸ்வஜித் நாயக் கூறி உள்ளார். முன்னதாக பிஸ்வஜித் நாயக் கடவுள்கள் ஜெகன்நாத் மற்றும் கணேஷ் ஆகியோரின் பல சிலைகளையும் உருவாக்கி அதற்காக Asia Book of Records-ல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published: