முகப்பு /செய்தி /இந்தியா / சிவராத்திரி அன்று மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்.. பகீர் சம்பவம்

சிவராத்திரி அன்று மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்.. பகீர் சம்பவம்

மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்

மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்

மனைவியை கொலை செய்து சிவராத்திரி அன்று அவரது உடலை வைத்து நிர்வாண பூஜை செய்த நபரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் என்ற பகுதியில் அம்பாபலாஸ் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர் அஸ்தமா கதுவா. இவருக்கு மாந்திரீக செயல்களில் தீவிர ஈடுபாடு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிவராத்திரி அன்று தனது 35 வயது மனைவியான மமதா கதுவாவை கணவர் கொலை செய்துள்ளார். அத்துடன் அன்றைய இரவில் மனைவியின் உடலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று நிர்வாண மாந்திரீக பூஜைகளை செய்துள்ளார். இதை கொலையாளி அஸ்தமாவின் சகோதரர் சிவா நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அவர்கள் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், கணவர் அஸ்தமாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. உயிரிழந்த மம்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், முதல் கணவரை விட்டு பிரிந்த மம்தா அஸ்தமாவுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மாந்திரீக பூஜைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் பெண்ணை பலி கொடுத்து நிர்வாண பூஜை நடத்த நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்துள்ளார். பூஜைக்கு வேறு பெண் கிடைக்காததால் தனது மனைவியையே கொன்று பூஜை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Murder, Odisha, Superstition