8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு இரக்கம் காட்டாத காவல் ஆய்வாளர் - 3 கி.மீ நடைபயணம், 2 மணி நேர தவிப்பு

மாதிரிப்படம்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலைக்கவசம் அணியாத காரணத்தால், 8 மாத கர்ப்பிணியை பெண் காவலர் ஒருவர் 3 கி.மீ நடக்க வைத்த கொடுமை ஒடிஷாவில் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சரத் எனும் பகுதியை சேர்ந்தவர் பிக்ரம் பிருலி. 8 மாத கர்ப்பிணியான தனது மனைவி குருபர் பிருலியை, உதாலா (Udala)பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். அப்போது, ரீனா பக்சானா எனும் பெண் காவல் ஆய்வாளர், பிக்ரமின் இரு சக்கர வாகனத்தை இடைமறித்து அவரது மனைவி தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தார். ஆனால், தன்னிடம் கையில் பணம் இல்லை எனவும், ரசீது கொடுத்தால் ஆன்லைனில் அபராதத் தொகையை செலுத்தி விடுவதாகவும் பிக்ரம் கூறியுள்ளார்.

  இதை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளர், உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, பிக்ரமை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவரது மனைவியை கொளுத்தும் வெயிலில் சாலையிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

  நீண்ட நேர ஆகியும் கணவர் திரும்பி வராததால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொளுத்தும் வெயிலில் கடும் சிரமத்திற்கு மத்தியிலும் குருபர் நடந்தே காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனால், அவருக்கு கடுமையான உடல் வலியுடன், காய்ச்ச்சலும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் மன்றாடி கேட்டும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக, பிருலி தம்பதி அளித்த புகாரின் பேரில், பெண் காவல் ஆய்வாளர் ரீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சினிமாவில் காட்டும் வில்லன் காவலர்களை காட்டிலும் மோசமான, இரக்கமற்ற அந்த பெண் காவலரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: