"சேவிங், ஹேர் டிரையிங்" நோயாளிகளை பக்குவமாக கவனிக்கும் ஒடிசா சுகாதாரப் பணியாளர்கள்!

ஒடிசா சுகாதாரப் பணியாளர்கள்

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் சுரேஷ் மோகன்பத்ரா, சுகாதாரப் பணியாளர்களின் இந்த தன்னலமற்ற பணியை மனதார பாராட்டியுள்ளார்

  • Share this:
ஒடிசாவில் கோவிட் வைரஸ் நோயாளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் சேவிங் மற்றும் ஹேர் டிரையிங் செய்துவிடுவது, பாராட்டைப் பெற்றுள்ளது.

உலகளவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பல நாட்கள் அல்லது மாதக்கணக்கில் அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் அவர்களின் மன நிலை, தேக ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இதனை போக்கும் விதமாக ஒடிசா சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

எம்.கே.சி.ஜி மெடிக்கல் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, ஷேவிங் மற்றும் ஹேர் டிரையிங் போன்ற பணிகளை சுகாதார பணியாளர்கள் செய்து விடுகின்றனர். மனம் வருந்தி இருக்கும் நோயாளிகளுக்கு இதனை செய்யும்போது, மனதளவில் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் அவர்கள் இருப்பார்கள் என சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களிலும் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது.

ALSO READ | பறவைகள் தேடும் முதியவர் லியோனார்டோ - யார் இவர்?

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் சுரேஷ் மோகன்பத்ரா, சுகாதாரப் பணியாளர்களின் இந்த தன்னலமற்ற பணியை மனதார பாராட்டியுள்ளார். கஜம் பகுதியில் சப் கலெக்டராக இருக்கும் கீர்த்தி வாசன், சுகாதாரப் பணியாளர்களை பாராட்டியிருப்பதுடன், மற்ற மருத்துவமனைகளிலும் இதனை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கஜம் மாவட்ட ஆட்சியர் பைஜாய் அம்ருதா குலங்கேவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

  

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு மனதளவிலான புத்துணர்ச்சி கட்டாயம் தேவை. அதனை அறிந்து எம்.கே.சி.ஜி மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்கள் எடுத்துள்ள இத்தகைய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என மருத்துவர் நேகா ராகுல் கூறியுள்ளார். குடும்பத்தினர் இல்லாத இடத்தில் அக்கறையும், கவனிப்பும் கிடைக்கும்போது பாசிடிவ் ஸ்பிரிட் அவர்களுக்குள் ஏற்படும் என்றும், இந்த முன்முயற்சிக்கு பின் இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

ALSO READ | ரூ.103-க்கு இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு ஏலம் - எங்கு தெரியுமா?

மற்றொரு மருத்துவர் ரவிக்குமார் என்பவர் சுகாதாரப் பணியாளர்களை பாராட்டி எழுதியுள்ள பதிவில், வீட்டில் இருக்கும் சூழலை நோயாளிகளுக்கு கொடுப்பது என்பது எளிதான விஷயமல்ல. ஆனால், அத்தகைய முயற்சியை எடுத்திருக்கும் முன்களப் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணைப்பு இந்த புகைப்படங்கள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

 

  

கடந்த 24 மணி நேரத்தில், ஒடிசா மாநிலத்தில் புதிதாக கொரோனா வைரஸூக்கு 8,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 8,37,226 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 69 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,167 பேர் இறந்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published: