ஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி

இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்களின் உயிர் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையில் ஒருவர் முடிவு செய்யவேண்டும்.

ஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி
நவீன் பட்நாயக்
  • Share this:
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஒடிசாவில் ஏப்ரல் 30-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. முன்னதாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்துவருகிறது.

இதற்கிடையில், நேற்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அனைத்து கட்சி சார்பிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல, தெலங்கானா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்தநிலையில், நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா, ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுவரையில் கொரோனாவால் ஒடிசாவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து வீடியோ பதிவை வெளியிட்ட அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ‘ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்கும் மக்களுக்கு நன்றி. இதில், பல தியாகங்களும் கடினமான நேரங்களும் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையை கையாள்வதற்கு இது ஒன்றுதான் வழி. கொரோனாவை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறிவருகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்களின் உயிர் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையில் ஒருவர் முடிவு செய்யவேண்டும்.

இந்த முக்கியமான எல்லாவற்றையும்விட மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமானது என்று மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 30-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கையும் ஏப்ரல் 30-ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

 
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading