ODISHA DELIVERS HAPPINESS KIT TO SCHOOL CHILDREN IN STATE VIN GHTA
ஒடிஷாவின் பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்கள் அடங்கிய 'ஹப்பினஸ் கிட்'!
ஹப்பினஸ் கிட்
தற்போது, ஒடிசாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் ஒடிஷா மாநிலத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் 10, 12வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு 'ஹேப்பினஸ் கிட்’ வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். ஒவ்வொரு கிட்டிலும் கோதுமை, மஞ்சள் தூள், வேர்க்கடலை, வெல்லம், சுண்டல், இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிஸ்கட் மற்றும் பிற சத்தான உணவு பொருட்கள என மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு பொருட்கள் அடங்கியுள்ளது. மேலும் அதில் பேனா, பென்சில், நோட் பேடு, சானிட்டரி நாப்கின், டூத்பேஸ்ட், அயோடைஸ் உப்பு மற்றும் சோப் பொருட்களும் உள்ளது.
அக்ஷய பாத்ரா அறக்கட்டளை மாணவர்களுக்கு 'ஹேப்பினஸ் கிட்’ வழங்க அரசிடம் அனுமதி கோரிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் உள்ள 1,916 பள்ளிகளை சேர்ந்த 1.83 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு 'ஹேப்பினஸ் கிட்ஸ்’ வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவையும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளை வழங்குகிறது.
பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து நாயகர், சுந்தர்கர், குர்தா, பூரி மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கிட்ஸ் விநியோகிக்கப்படும். இந்த கிட்ஸ் விநியோகத் திட்டம் மாநில தலைநகரின் புறநகரில் உள்ள பாலியண்டாவிலிருந்து தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அதிகாரி, பள்ளிகள் மூடப்பட்டதால் மதிய நேர உணவுக்கான நிதி நேரடியாக அரசாங்க பயனாளிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது, இருப்பினும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்க அறக்கட்டளை அளித்த பங்களிப்பு பயனற்றதாகவே இருந்தது,
எனவே மாணவர்களுக்கு கிட் வழங்குவதற்கும் தற்போது இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த கிட்ஸ் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்னதாக அவர்களை தயார்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். தற்போது, ஒடிசாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.