• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவிட் பாசிட்டிவ் ஆன காங் எம்.எல்.ஏ.. மாஸ்க் அணியாமல் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவலம்

கோவிட் பாசிட்டிவ் ஆன காங் எம்.எல்.ஏ.. மாஸ்க் அணியாமல் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவலம்

Suresh Routray

Suresh Routray

கொரோனாவால் பாதிக்கப்பட்டும் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் இருக்காமல் பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வைரஸ் பாதிப்புக்கு ஆளான மறுநாளே சரியாக மாஸ்க் கூட அணிந்து கொள்ளாமல் பொதுமக்களுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிரது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில் விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொதுமக்களுடன் ஒன்றாக இணைந்து பல மணி நேரங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுரேஷ் ரூட்ரே மற்றும் அவரது மனைவிக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 17) கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எம்.எல்.ஏவின் மனைவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புவனேஸ்வரில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நேற்று எம்.எல்.ஏ சுரேஷ் ரூட்ரே கலந்து கொண்டார்.

Also read:   மாவட்ட நீதிபதி மீது போலீசார் திடீர் தாக்குதல் - வழக்கு விசாரணையில் நடுவே பரபரப்பு சம்பவம்..

கொரோனாவால் பாதிக்கப்பட எம்.எல்.ஏ சுரேஷ் நிகழ்ச்சி நடந்த சுச்சனா பவனுக்கு தனது காரில் சென்றுள்ளார். அங்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட நிலையில், அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் அவர் முகக்கவசமோ அல்லது வேறு தடுப்பு சாதனங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டும் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் இருக்காமல் பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எம்.எல்.ஏ சுரேஷ் கூறுகையில், இதனால் எந்த அச்சமும் உங்களுக்கு தேவையில்லை, நான் 1.22 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறேன். இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது, இதனால் யாருக்கும் பாதிப்பு பரவாது என்றார்.

மேலும் எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் எங்கள் கட்சி நன்றாக செயல்படும் என நம்புகிறேன். தேர்தல் நெருங்குவதால் எனக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை.

Also read:  சீனாவில் ஒரு ‘பரோட்டா சூரி’ சம்பவம்... பஃபேயில் அதிகம் சாப்பிட்டதால் மிரண்டு போன பிரபல உணவகம்..

இது குறித்து மூத்த மருத்துவர் சூர்ய பிரகாஷ் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா சூழல் கட்டுக்குள் இருந்தாலும், அண்டை நாடுகள், மாநிலங்களில் சூழல் சரியில்லை என்பதால் கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் இருக்க வேண்டும். அதே போல கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: