நீங்கள் எந்த நேரமும் கொல்லப்படலாம்... கவனமாக இருங்கள் - ஒடிசா முதல்வருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

நீங்கள் எந்த நேரமும் கொல்லப்படலாம்... கவனமாக இருங்கள் - ஒடிசா முதல்வருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக்

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதனால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துவருகிறார். 74 வயதான நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். ஒடிசா மாநிலத்தின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்துவரும் நவீன் பட்நாயக்குக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், ‘துப்பாக்கிகளுடன் கூடிய அதிநவீன ஒப்பந்த கொலைகாரர்கள் உங்களை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். சில ஒப்பந்தக் கொலைகாரர்கள் உங்களை கொலை செய்யலாம் என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

  இந்த ஒப்பந்த கொலைகாரர்கள் அதிநவீன ரக ஆயுதங்களான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டவர்கள். ஏற்கெனவே உங்களைக் கொல்வதற்கான ஆயுதங்கள் ஏற்கெனவே வாங்கப்பட்டுவிட்டன. நீங்கள் எந்த நேரத்தில் கொல்லப்படலாம். அதனால், தயவுகூர்ந்து கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த அடையாளமற்ற கொலை மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து நவின் பட்நாயக்குக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: