• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒடிசாவில் திருமணம் முடிந்த சிலமணி நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மணமகள்

ஒடிசாவில் திருமணம் முடிந்த சிலமணி நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மணமகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குப்தேஸ்வரி சாஹூ என்கிற ரோஸி (Gupteswari Sahoo) மறுவீட்டு சடங்கின்போது, குடும்பத்தை விட்டு பிரியமுடியாமல் அழுதிருக்கிறார். ஒரு கட்டத்தில் விக்கி விக்கி அழுத அவர் திடீரென்று மயக்கமடைந்துவிட்டார்.

  • Share this:
இந்தியாவில் திருமணங்கள் ஒரு உணர்ச்சிபூர்வமான விஷேஷம். திருமணத்தின் போது ஆனந்தமாகவும் மறுவீட்டிற்கு செல்லும் போது அழுகையும் ஏற்படுவது பெண்களுக்கு சாதாரணம். ஆனால் இங்கு ஒரு மணமகள் தனது சொந்த வீட்டை விட்டு செல்லும் சோகத்திற்கு முன், ஒரு ஷாக்கான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த துயரமான சம்பவம் எதிர்பாராதது. திருமணம் முடிந்து பெண்ணை மறுவீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் சோர்வான மணமகள் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மகிழ்ச்சியான திருமண வீட்டின் குதூகலம் சோகமாக மாறிய நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்தது. உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும். இது ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனை முடக்கும்.

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குப்தேஸ்வரி சாஹூ என்கிற ரோஸி (Gupteswari Sahoo) மறுவீட்டு சடங்கின்போது, குடும்பத்தை விட்டு பிரியமுடியாமல் அழுதிருக்கிறார். ஒரு கட்டத்தில் விக்கி விக்கி அழுத அவர் திடீரென்று மயக்கமடைந்துவிட்டார். வியாழக்கிழமையன்று தான் ரோஸிக்கு, போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த பிசிகேசன் பிரதனுடன் (Bisikesan Pradhan) திருமணம் முடிந்தது. புதிதாக திருமணமான மணப்பெண், மாமியார் வீட்டுக்கு கிளம்பியபோது மனம் தாங்காமல் அழுதார். அது ஒருபுறமிருக்க சில குடும்ப சிக்கலும் இருந்ததாகவும் அதனால் கூட ரோஸி சோகமாக இருந்ததாகவும் ஒடிஷா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சோகம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்புதான் ரோஸியின் தந்தை காலமானார். அதிலிருந்தே மணமகள் ரோஸி துக்கத்தில் இருந்ததாக, திருமணத்திற்கு வந்த ஒரு விருந்தினர் கூறினார். மணமகள் ரோஸி, மயக்கமடைந்தவுடன் கூடியிருந்த உற்றார் உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார்கள். ஆனால், ரோஸிக்கு மீண்டும் சுயநினைவு வரவேயில்லை.

உடனே ரோஸியை துங்குரிபள்ளு சி.எச்.சி (Dunguripallu CHC) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணமகள் ரோஸி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 'இதய செயலிழப்பு' காரணமாக உயிரிழந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஸி ஒரு இளம் பெண், ஆரோக்கியமான பெண் என்பதால், Binika காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவரும் கூறினார். தற்போது, ரோஸியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் மணமகளின் மரணத்திற்கான முடிவை உறுதியாக சொல்லமுடியும். இந்த சோகமான சம்பவம் மணமகளின் தாய் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வு வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என உறவினர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: