• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தானியங்களை கொண்டு 8 அடி நீளத்திற்கு மோடி உருவப்படத்தை வரைந்த பெண் கலைஞர்!

தானியங்களை கொண்டு 8 அடி நீளத்திற்கு மோடி உருவப்படத்தை வரைந்த பெண் கலைஞர்!

தானியங்களை கொண்டு 8 அடி நீளத்திற்கு மோடி உருவப்படத்தை வரைந்த பெண் கலைஞர்

தானியங்களை கொண்டு 8 அடி நீளத்திற்கு மோடி உருவப்படத்தை வரைந்த பெண் கலைஞர்

பிரியங்கா சஹானி தனது மறைந்த தந்தை பிபேகானந்தா சாஹ்னியிடமிருந்து இந்த கலையை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும், பிற நாட்டுத் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல், பல கலைஞர்கள் அவருக்காக சில அழகான படைப்புகளையும் அர்ப்பணித்து வருகின்றனர். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் டெவலப்பர் பிரியங்கா சஹானி, என்பவர் பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளில் அவரின் உருவப்படத்தை தானியங்களை கொண்டு வடிவமைத்துள்ளார்.

முன்னதாக இவர் பூரி ஜெகநாதர் கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படும் ரத யாத்திரையின் போது பகவான் ஜகன்னாதர் மற்றும் அவரது உடன்பிறப்புகளின் 108 அற்புதமான மினியேச்சர் ஓவியங்களை வரைந்து அசத்தியிருந்தார். ஒடிசாவை பூர்விகமாக கொண்ட கலைஞர் பிரியங்கா சஹானி தற்போது ஐந்து வகையான உணவு தானியங்களைப் பயன்படுத்தி பிரதமரின் 8 அடி நீள உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து ANI யிடம் பேசிய அவர், “இந்த ஓவியத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. நான் அந்த ஓவியத்தை உருவாக்க 20 முதல் 25 மணிநேரம் எடுத்துக்கொண்டேன். இந்தியா ஒரு விவசாய நாடு, எனவே பிரதமருக்கு மரியாதை செலுத்துவதற்காக உணவு தானியங்களைப் பயன்படுத்தி அவரது உருவப்படத்தை நான் உருவாக்கியுள்ளேன். இது ஒடிசாவின் பட்டசித்ரா பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

Also Read : பிரதமர் மோடியின் ஆரம்பக் கால அரிய புகைப்படங்கள்

பிரியங்கா சஹானி தனது மறைந்த தந்தை பிபேகானந்தா சாஹ்னியிடமிருந்து இந்த கலையை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர் நிறைய தலைசிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளார். இதையடுத்து, புகழ்பெற்ற மணல் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் 2035 கடல் ஓடுகளால் செய்யப்பட்ட ஒரு மணல் சிற்பத்தை செதுக்கி மோடிக்கு அர்ப்பணித்தார். அதில் ஹாப்பி பர்த்டே மோடிஜி என்று எழுதி மோடியின் உருவத்தையும் மணலில் செதுக்கியுள்ளார்.


நரேந்திர மோடி செப்டம்பர் 17, 1950 அன்று குஜராத்தில் பிறந்தார். அதன்படி இன்று அவர் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமரின் பிறந்தநாளையொட்டி இன்று முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மோடியின் பிறந்தநாளை `சேவை மற்றும் சமர்ப்பண தினமாக'க் கொண்டாட முடிவு செய்திருப்பதாக பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, மோடி தனது அரசியல் பொது வாழ்வில் தலைமைப் பதவியில் அடியெடுத்துவைத்து இந்த ஆண்டோடு (அக்டோபர் 2021) இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதாவது, குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளும், இந்தியப் பிரதமராக ஏழு ஆண்டுகளும் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். இதையும் கொண்டாடும் விதமாக, இன்று முதல் தொடர்ந்து 20 நாள்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பா.ஜ.க-வினர் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: