Home /News /national /

ஒடிசாவில் விமான விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழப்பு

ஒடிசாவில் விமான விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழப்பு

விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்

விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்

ஒடிசா மாநிலத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி மற்றும் விமானி உயிரிழந்தனர்.

  • News18
  • Last Updated :
    ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள தளத்தில், தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். இன்று காலை அதுபோல, சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

    திடீரென எதிர்பாராத விதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா (20) தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Sankar
    First published:

    Tags: Odisa

    அடுத்த செய்தி