முகப்பு /செய்தி /இந்தியா / பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை... வாட்டி வதைக்கும் வெப்பக்காற்றால் ஒடிசா அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை... வாட்டி வதைக்கும் வெப்பக்காற்றால் ஒடிசா அரசு அறிவிப்பு

Heatwave மாநிலம் முழுவதும் கடும் வெப்பம் காற்று வீசுவதால் ஒடிசாவில் பள்ளிகளுக்கு ஐந்து நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heatwave மாநிலம் முழுவதும் கடும் வெப்பம் காற்று வீசுவதால் ஒடிசாவில் பள்ளிகளுக்கு ஐந்து நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heatwave மாநிலம் முழுவதும் கடும் வெப்பம் காற்று வீசுவதால் ஒடிசாவில் பள்ளிகளுக்கு ஐந்து நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா கல்வி மாநில பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் பிரதாப் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாநிலத்தில் நிலவும் அதீத வெப்ப காற்று காரணமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட அரசு இம்முடிவை எடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இயங்காது. அதேவேளை, 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஏப்ரல் 28ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்று வீசுவதால் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதமே இந்தியாவில் கடுமையான கோடைக் காலம் தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேலாகவும், சராசரி வெப்பநிலை 35 டிகிரிக்கு மேலாகவும் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த 122 ஆண்டுகளில் இந்தியாவின் அதிகபட்ச வெப்பம் கடந்த மார்ச் மாதம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படிங்க: புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதில் ஆர்வமற்ற 50% இந்தியர்கள் - ஷாக் ரிப்போர்ட்

குறிப்பாக, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் தற்போது அனல் காற்று தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பம் 44 டிகிரியை நெருங்கும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்திலும் நேற்று பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தின் பான்குரா பகுதியில் 43.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.ஒடிசா மாநிலத்திலும் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 40 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகியுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் 41.7 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்த இரண்டு நாள்களுக்கு இந்த வெப்பத்தை விட கூடுதலாக 2-4 டிகிரி வெப்பம் ஏற்படலாம் என மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்தே அம்மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

First published:

Tags: Heat Wave, Summer Heat