'ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன்' என்ற சொற்றொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் வரும் சனிக்கிழமையன்று 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படும் இரண்டாவது பௌர்ணமி-யின் அரிய நிகழ்வை காண உள்ளோம். வழக்கமான மாதாந்திர சந்திர நிகழ்வு என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமி மற்றும் ஒரு அமாவாசை நிகழ்வது தான். இருப்பினும், அசாதாரண சந்தர்ப்பங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் கிடைக்கின்றன. இதுகுறித்து மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்ச்பாய் கூறியதாவது, "கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒரு பௌர்ணமி நிகழ்வு நடந்தது. இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி மீண்டும் பௌர்ணமி நிகழும்.
ஒரு காலண்டர் மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் இருக்கும் போது, இரண்டாவது பௌர்ணமி "நீல நிலவு" என்று அழைக்கப்படுகிறது. இதில் கணிதமும் கொஞ்சம் உள்ளது. ஒரு சந்திர மாத காலம் 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி நேரம், 44 நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகள் ஆகும்.
எனவே, ஒரு மாதத்தில் இரண்டு முறை முழு நிலவுகள் இருக்கும் பட்சத்தில், முதல் பௌர்ணமி மாத தொடக்கத்திலேயே அதாவது 1 அல்லது 2ம் தேதிகளில் நடக்க வேண்டும். இந்த கூடுதல் நேரம் மாதங்களை பொறுத்தே வருகிறது. சுமார் 30 மாதங்களுக்குப் பிறகு வருடத்தில் ஒரு கூடுதல் பௌர்ணமி இருக்கும்" என்று பரஞ்ச்பாய் விளக்கினார். அதேபோல, பிப்ரவரி மாதத்தில் சாதாரணமாக 28 நாட்களும் லீப் வருடத்தில் 29 நாட்களும் இருப்பதால் பௌர்ணமி இருப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக 30 நாட்களை கொண்ட ஒரு மாதத்தில் நிகழ்ந்த கடைசி ப்ளூ மூன் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ஆகும். அடுத்தது செப்டம்பர் 30, 2050 அன்று ப்ளூ மூன் இருக்கும் என்று பரஞ்ச்பாய் கூறினார். 31 நாட்களை கொண்ட மாதங்களை பொறுத்தவரை, கடந்த 2018 இல் இரண்டு ப்ளூ மூன்கள் இருந்தன. முதலாவது ஜனவரி 31 ஆம் தேதியும், இரண்டாவது ப்ளூ மூன் மார்ச் 31 ஆம் தேதியும் இருந்தது. ஏனெனில் இதற்கு முந்தைய பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டுமே இருந்தன.
அடுத்த ப்ளூ மூன் ஆகஸ்ட் 31, 2023ம் ஆண்டு நிகழும் என்று பரஞ்ச்பாய் கூறினார். அதனை தொடர்ந்து நேரு கோளரங்கத்தின் இயக்குனர் என்.ரத்னாஸ்ரீ தெரிவித்ததாவது, "ப்ளூ மூன் என்ற சொல் ஒரு காலண்டர் காலமாகும். 30 நாட்களில் ஒரு ப்ளூ மூன் இருப்பது மிகவும் பொதுவானதல்ல" என்று அவர் கூறினார். இந்த நிகழ்வு பெரும்பாலும் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் காலெண்டருக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தகவல் தொடர்பு பிரிவும், வானியல் ஆர்வலருமான விஜியன் பிரசருடன் விஞ்ஞானி டி வி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
இஸ்லாமிய அல்லது திபெத்திய காலெண்டர்களில் அல்லது இந்தியாவின் பெரும்பகுதிகளில் சந்திர இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகளின் நிகழ்வை நீங்கள் காண மாட்டீர்கள் என்று கூறினார். மொத்தத்தில் 'ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன்' என்ற சொற்றொடர், அடிக்கடி நடக்காத ஒன்றைக் குறிக்கிறது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Moon