ஹோம் /நியூஸ் /இந்தியா /

இரு அவைகளிலும் நிறைவேறியது ஒபிசி இடஒதுக்கீடு மசோதா: விரைவில் சட்டமாகிறது!

இரு அவைகளிலும் நிறைவேறியது ஒபிசி இடஒதுக்கீடு மசோதா: விரைவில் சட்டமாகிறது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே உருவாக்க அதிகாரம் அளிக்கும் ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில/ யூனியன் பிரதேச அரசுகளே கண்டறியும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசமைப்புச் சட்ட (127-ஆவது திருத்தம்) மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நீதி-அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் இதனை தாக்கல் செய்தார்.  மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரித்த போதிலும் இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்ச வரம்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில்  385 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட எதிராக வாக்களிக்கவில்லை. இதை தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: மாநிலங்களவையில் கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு - பாட்டுப்பாடி எம்.பிக்கள் அமளி..

இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  அப்போது, மசோதா தொடர்பாக சில திருத்தங்களை எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், அவற்றை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து 187 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் வழங்கிஅரசாணை வெளியிட்ட பின்னர், இந்த மசோதா சட்டமாக அமலாகும்.

இதையும் படிங்க: பெங்களூருவில் 5 நாட்களில் 24க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா: ஊரடங்கு யோசனையில் கர்நாடகா!

First published: