ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை - சிவசேனா கண்டனம்

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

இந்தியத் தலைவர்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் விமர்சனம் செய்வது ஏற்படையதல்ல என்று ராகுல் காந்தி குறித்த ஓபாமாவின் கருத்துக்கு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவருடைய அரசியல் பயணம் குறித்து ஏ ப்ராமிஸ் லேண்ட் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து விமர்சனம் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியிருந்தது. அதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில், ‘ராகுல் காந்தி பதற்றத்துடன் இருப்பவர். நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர் போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமல் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய கருத்து இந்திய அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத், ‘ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர் இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இதுபோன்று கருத்துகளைக் கூற முடியாது.

  அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் ட்ரம்பை பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டோம். இந்த நாட்டைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்’ என்று கேள்வி எழுப்பினார்.
  Published by:Karthick S
  First published: